தமிழ் கட்டுரை போட்டியில் இரண்டாம் இடதினை புத்தளத்தை சேர்ந்த முஹம்மத் ஜனீஸ் செய்னப் பெற்றுக்கொண்டுள்ளார்.
புத்தளம் மாவாட்டம் - எம்.யூ.எம்.சனூன்
UPDATED: Sep 27, 2023, 2:13:33 AM
பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட மாணவர் சாகித்திய விழாவில், ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்ட தமிழ் கட்டுரை போட்டியில் இரண்டாம் இடதினை புத்தளத்தை சேர்ந்த முஹம்மத் ஜனீஸ் செய்னப் பெற்றுக்கொண்டுள்ளார்.
"எமது தேசத்தை விழிப்படைய செய்வோம்" எனும் தொனிப்பொருளில் பேராதனை பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் கலாச்சார துணை குழுவினரால் 28 வது தடவையாக இந்த போட்டி நடாத்தப்பட்டிருந்து.
இதற்கான பரிசளிப்பு விழா அண்மையில் பல்கலைக்கழக பொறியியல் பீட ஈ.ஓ.ஈ. அரங்கில் இடம்பெற்றது.
புத்தளம் நாகவில்லு எருக்கலம்பிட்டி முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் தரம் 04 இல் கல்வி பயிலும் இம்மாணவி நாகவில்லு முஹம்மது ஜனீஸ் மற்றும் பாத்திமா சியாஸ்னா தம்பதிகளின் புதல்வியாவார்.