கொசுக்கடியை விட கொடியது.......

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தூங்கும் போது விட்டு விட்டு குறட்டை விடுவது உடல்பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். குறட்டை எதனால்வருகிறது, இதனால் என்ன பாதிப்புகள் ஏற்படும் . உடல் பருமனானவர்களுக்கு கழுத்துப்பகுதியில் சதை அதிகமாகவளர்ந்து இருப்பதால் தொண்டையில் உள்ள சுவாசக்குழாய் சதையால் அழுத்தப் படும். இதனால் மூச்சுக் காற்றை உள் இழுக்கும் போது குழாய் அடைப்பால் தடையேற்படும். இதனால் குறைட்டையொலி கேட்கும். மதுஅருந்தும் பழக்கம் உள்ளவர்கள் அதிகமாக மதுகுடித்தால் வயிற்று ஒவ்வாமைகாரணமாக விக்கல் மற்றும் குறட்டைஉண்டாகும். செரிமானமாக அதிகநேரம் பிடிக்கும் நார்ச் சத்துள்ள, கொழுப்புநிறைந்த அல்லது மசாலா உணவுகளை இரவில்சாப்பிட்டு தூங்குபவர்களுக்கு வாயுவெளியீடு, குறைட்டைஏற்படும். குறட்டை விடும் போது உடலுக்குத்தேவையான அளவு ஆக்ஸிஜன் சுவாசம்மூலம் கிடைக்காது. இதனால் போதுமான தூக்கம்வராது. அடிக்கடி குறட்டைசத்தமே அவர்களை எழுப்பி விட்டு விடும். பெரும்பாலானோர் மல்லாந்துபடுத்து வாய்வழியாக தொடர்ந்து மூச்சை இழுத்து விடும் பொழுது குறட்டைஉண்டாகும். இதனால் அடிக்கடி நாக்கு,தொண்டை உலர்ந்து நடு நிசியில் தண்ணீர்தாகம் ஏற்படும். நெற்றிமேடு மற்றும் மூக்கின்பக்கவாட்டிலுள்ள சைனஸ்பைகளில் பாதிப்பு ஏற்படும் பொழுது குறட்டைஏற்படும். புகைப் பிடிப்பவர்களுக்கு குறைட்டைதொல்லை ஏற்படும். அடிக்கடி ஜல தோஷம் ஏற்படுபவர்களுக்கு குறட்டைவரும். தூக்கமாத்திரை உள்ளிட்ட தேவை அற்ற வாய் வழி மாத்திரைகளை அடிக்கடி பயன் படுத்துபவர்களுக்கு குறட்டையுண்டாகும். உடல் எடையை கட்டுக்குள்வைத்து, பக்க வாட்டில் திரும்பிப்படுத்து தூங்குபவர்கள் இப்பிரச்னையில் இருந்து விடு படுகின்றனர். மது, புகை, கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளைத்தவிர்ப்பவர்களுக்கும் குறைட்டைத்தொல்லை இருக்காது. *அனுபவஸ்தன்*

VIDEOS

RELATED NEWS

Recommended