• முகப்பு
  • pondichery
  • வேளாண் துறை அமைச்சர் அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு !

வேளாண் துறை அமைச்சர் அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு !

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

புதுச்சேரி திருக்காஞ்சி கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த கடந்த 99-ம் ஆம் ஆண்டு தற்போது வேளாண் துறை அமைச்சராக உள்ள தேனி ஜெயக்குமார் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பொழுது 79 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கியுள்ளார். ஆனால் 22 வருடங்கள் ஆகியும் இதுவரை அந்த இலவச மனைகளுக்கு பட்டா வழங்கப்படவில்லை, அந்த பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில் இலவச மனைப்பட்டா வழங்க கோரியும் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரியும் புதுச்சேரி சட்டசபையில் உள்ள வேளாண் துறை அமைச்சர் தேனி. ஜெயக்குமாரை அலுவலகத்தில் அவரை நேரில் சந்தித்து திருக்காஞ்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் அவரிடம் முறையிட்டனர். அப்போது அவர் அதற்கான பணிகள் நடந்து கொண்டு வருகிறது, விரைவில் பட்டா வழங்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த தொகுதி மக்கள் அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து சட்டசபை காவலர்களால் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர். மீண்டும் அவர்கள் சட்டசபை முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சட்டசபை முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறும்போது... கடந்த சட்டமன்ற தேர்தலில் நீங்கள் எனக்கு ஓட்டு போடவில்லை அதனால் யாருக்கு ஓட்டு போட்டீர்களோ அவர்களிடம் சென்று மனைப்பட்டா கேட்டு கொள்ளுங்கள் என்று அமைச்சர் கூறுவதாகவும் தற்போதெல்லாம் மனைப்பட்டா வழங்க முடியாது வேண்டுமென்றால் போராட்டம் நடத்துங்கள் என்று அமைச்சர் கூறியதாக தெரிவித்தனர். மேலும் கடந்த 22 வருடங்களாக அந்த இடத்தில் சிரமப்பட்டு வருவதாக கூறிய பொதுமக்கள் மழைக்காலத்தில் அந்த இடத்தில் குடி இருக்கவே முடியவில்லை என்றும் தெரிவித்தனர் எனவே உடனடியாக அமைச்சர் இலவச மனைப்பட்டா வழங்க வில்லை என்றால் மீண்டும் மிகப்பெரிய போராட்டத்தை தனது கிராமத்தில் நடத்த உள்ளதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். பேட்டி;1 அங்கம்மாள் 2. கல்யாணி, திருக்காஞ்சி. பாண்டிச்சேரி செய்தியாளர் சக்திவேல்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended