• முகப்பு
  • வானிலை
  • சுரண்டை அருகே வீராணத்தில் நேற்று மாலை வீசிய சூறைக்காற்றில் ஐந்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள், பள்ளி காம்பவுண்ட் சுவர், வீட்டின் மேற்கூறைகள் சேதம்.

சுரண்டை அருகே வீராணத்தில் நேற்று மாலை வீசிய சூறைக்காற்றில் ஐந்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள், பள்ளி காம்பவுண்ட் சுவர், வீட்டின் மேற்கூறைகள் சேதம்.

ராஜ்குமார்

UPDATED: May 18, 2023, 5:02:29 AM

தமிழகம் முழுவதும் கடந்த பதினைந்து நாட்களாக அக்னி நட்சத்திர வெயில் வாட்டி எடுத்தது. குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் கோடவையில் 100 டிகிரி தான்டி வாட்டி வதைத்தது. 

இதனால் பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டம் குறைவான காணப்பட்டது. இந்த நிலையில் 16.5.2023 மாலை திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

சுரண்டை‌அருகே உள்ள வீராணத்தில் சுமார் மாலை 5 மணி அளவில் வீசிய சூறைக்காற்றில் முஸ்லிம் பள்ளி வீதியில் உள்ள ஐந்துக்கு மேற்பட்ட மின்கம்பர்கள், பள்ளி காம்பவுண்ட் சுவர் சேதம் அடைந்தது.

அந்தப் பகுதியில் பழமை வாய்ந்த மரங்கள் சாய்ந்தன, இதேபோல் அரசு பள்ளியில் உள்ள மரங்களும் சாய்ந்தது, வீராணத்தில் ஐந்துக்கு மேற்பட்ட வீடுகளில் உள்ள ஓடுகள் காற்றில் பறந்தன.

மேலும் வீராணம் குளத்து கரையில் உள்ள மருதூர் சாஸ்தா கோவில் கட்டிடம் மற்றும் வயல் பகுதியிலுள்ள மின்கம்பங்கள், வாழைகள் சாய்ந்தன.

8

இதனால் வீராணம் முழுமைக்கும் மின் தடை ஏற்பட்டது. உடனடியாக வீராணம் ஒன்றிய கவுன்சிலர் சேக் முகம்மது தலைமையில் திமுகவினர் மற்றும் பொதுமக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

சம்பந்தப்பட மின் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.மின்வாரிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் விரைவாக செயல்பட்டு வீராணம் பகுதியில் 75 சதவீதம் பகுதியில் மின்சாரம் சப்ளை செய்தனர். 

VIDEOS

RELATED NEWS

Recommended