• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • சிப்காட் அமைக்க எதிர்ப்புப்தெரிவித்து  வளையப்பட்டியில்பல்வேறு விவசாய அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள் 200 க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிப்காட் அமைக்க எதிர்ப்புப்தெரிவித்து  வளையப்பட்டியில்பல்வேறு விவசாய அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள் 200 க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முத்தையா

UPDATED: May 11, 2023, 6:23:21 AM

நாமக்கல்லை அடுத்த வளையப்பட்டி, பரளி, என்.புதுப்பட்டி ஊராட்சி பகுதியில் தமிழ்நாடு அரசின் தொழில் துறை மூலம் சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் அமைய இருக்கிறது.

இதற்கான நிலம் கையகப்படுத்து வதற்காக மோகனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வளையப்பட்டி, பரளி,அரூர், புதுப்பட்டி, லத்துவாடி, உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

நிலம் கையகப்படுத்தப்பட்டால் ஏராளமான விவசாய நிலங்களும் விவசாயமும் பாதிக்கப்படும் என கூறி அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதில் பொது மக்களின் கருத்துக்களை கேட்காமல் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்பட்டு வருவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். 

மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு சிப்காட் அமைப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வளையப்பட்டியில் தமிழக விவசாய முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர்

கே.பாலசுப்பரமணியன்,மற்றும் பல்வேறு விவசாய அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள் , விவசாய பெண்கள் 

சுமார் 200 க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended