• முகப்பு
  • district
  • 150க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்குபெற்று, 25,000 வேலைவாய்ப்பு முகாம் 25.06.2022 அன்று நடத்தப்படவுள்ளது.

150க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்குபெற்று, 25,000 வேலைவாய்ப்பு முகாம் 25.06.2022 அன்று நடத்தப்படவுள்ளது.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

பெரம்பலூர் மற்றும் அரியலுார் மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில், 25.06.2022 அன்று நடைபெறவுள்ள மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமினை சிறப்பாக நடத்த மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் , தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் தலைமையில் இன்று (17.06.2022) பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பெரம்பலுார் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள், அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி இ.ஆ.ப., அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ம.பிரபாகரன்(பெரம்பலுார்), கு.சின்னப்பா (அரியலுார்), க.சொ.க.கண்ணன் (ஜெயங்கொண்டம்) ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பொற்கால ஆட்சியில் படித்த இளைஞர்கள் அனைவருக்கும் தகுதியான வேலைவாய்ப்பு கிடைத்திட வேண்டும் என்ற உன்ன நோக்கத்தில் தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் சார்பில் பெரம்பலுார் மற்றும் அரியலுார் மாவட்டங்களுக்கு மேலமாத்துார் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளியில் 25.06.2022 அன்று மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இந்த முகாமினை சிறப்பாக நடத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து அறிவுரைகளை வழங்குவதற்காக பெரம்பலுார் மாவட்டத்திற்கு வருகைதந்துள்ள தெழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் நமது பெரம்பலுார் மற்றும் அரியலுார் மாவட்டங்களில் உள்ள படித்த இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் அவர்களின் திறமைக்கேற்ற வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் , வேலைவாய்ப்பு முகாம் குறித்த தகவல்களை அனைத்து தரப்பினருக்கும் எடுத்துச்செல்ல வேண்டும். இவ்வாறு தெரிவித்தார். தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் அவர்கள் தெரிவித்ததாவது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டதன் அடிப்படையில் தமிழ்நாட்டில், இதுவரை 61 இடங்களில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 87,994 நபர்களுக்கு தனியார் துறையில் வேலையினை பெற்றுக் தந்துள்ளோம். மாண்புமிகு தமிழ்நாடு முதலைமச்சர் அவர்கள் மூன்று மாதங்களுக்கு முன்பு செங்கல்பட்டு கிரசண்ட கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த போது 1,00,000 நபர்கள் கலந்துகொண்டார்கள். தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுபோன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகின்றோம். 25.06.2022 அன்று நடைபெறவுள்ள மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, ஓசூர், செங்கல்பட்டு, மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ளப்பட உள்ளனர். இதில் முக்கியமான நிறுவனங்களான MRF நிறுவனம் பெரம்பலூர், TVS நிறுவனம், சென்னை, Kotak Mahindra Group, JBM Auto Ltd, Innovace Group சென்னை, Hindustan Group of Company உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்குபெறவுள்ளது. பெரம்பலுார் மற்றும் அரியலுார் மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு 25000 நபர்களுக்கு வேலைவாய்ப்பை தர நாங்கள் தயாராக உள்ளோம். முகாம் நடைபெறுவது குறித்து மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் முறையாக விளம்பரங்கள் செய்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். எனவே, ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் செய்தல், வீடு வீடாக துண்டு பிரசுரங்கள் வழங்குதல், விளம்பர பதாகைகள் வைத்தல், உள்ளுர் தொலைக்காட்சியில் விளம்பரம் செய்தல் என அனைத்து வகையிலும் விளம்பரப்படுத்தி பொதுமக்களிடத்திலும், படித்த இளைஞர்களிடத்திலும் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் குறித்த தகவலை எடுத்துச்செல்ல வேண்டும். மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் இளைஞர்கள் வேலைவாய்ப்பு முகாமிற்கு சென்று வர ஏதுவாக போதிய பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்திட வேண்டும். குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதை துறை அலுவலர்கள் உறுதிசெய்திட வேண்டும். இவ்வாறு பேசினார். பின்னர் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ள மேலமாத்தூர் ராஜ விக்னேஷ் மேல்நிலைப் பள்ளியினை தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் அவர்கள் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி, மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் சி.இராஜேந்திரன், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் கே.ஜெகதீசன்., திருச்சி மண்டல இணை இயக்குநர் (வே.வா) மு.சந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.லலிதா, அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரமேஷ், பெரம்பலூர் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் செல்வகுமார் மற்றும் அனைத்து துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் செய்தியாளர் ஜகாங்கீர்

VIDEOS

RELATED NEWS

Recommended