Author: THE GREAT INDIA NEWS

Category: crime

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நவரை விவசாயம் அமோகமாக பயிரிடப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 86 அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அறுவடை செய்த விவசாயிகள் கூடுதல் பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அரசு நேரடி கொள்முதல் மையத்தில் நெல்மணிகளை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் காலூர் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள அரசு நேரடி கொள்முதல் மையத்திற்கு நெல்களை விற்பனை செய்ய ஆசூர் பகுதியை சேர்ந்த பெரும் விவசாயி ராஜேந்திரன் மற்றும் செல்வம் குடும்பத்தினர் 200 மூட்டை கொள்ளளவு கொண்ட நெல்மணிகளை டாரஸ் கனரக லாரியில் ஏற்றிக்கொண்டு காலூர் வந்து கொண்டிருந்தனர். நெமிலி, பெரமல்லூர் வழியாக பெரியா நத்தம் வந்தபொழுது அந்த பகுதியில் மதுபோதையில் இருந்த 15க்கும் மேற்பட்ட நபர்கள் நெல் மணிகளை ஏற்றி வந்த கனரக லாரியை மடக்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் லாரியில் வந்தவர்கள் விவசாயிகள் என தெரியாமல் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் லாரியின் கண்ணாடிகளை உடைத்து லாரியை சேதப்படுத்தினர் .இதை தடுக்க வந்த விவசாயிகள் ஜெயவேல், ஜெயராம் ,பிரகாஷ், ராஜேஷ்குமார் ,ராமு, ஏழுமலை உள்ளிட்ட ஆறு நபர்களையும் கடுமையாக தாக்கியுள்ளனர். காயம்பட்ட 6 விவசாயிகளும் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்றனர். லாரி மற்றும் 6 விவசாயிகளை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயி ராஜேந்திரன், செல்வம் தரப்பில் மாகரல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் சேதமடைந்த நெல் மணிகள் உள்ள லாரியை மாகரல் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று லாரி மற்றும் விவசாயிகளை தாக்கிய கும்பல் பற்றி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். அரசு நேரடி கொள்முதல் மையத்திற்கு நெல்களை ஏற்றி வந்த விவசாயிகளை தாக்கி லாரியை சேதப்படுத்திய சம்பவம் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்.

Tags:

#இன்றையசெய்திகள்காஞ்சிபுரம் #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #kanchipuramnewstodaytamil #kanchipuramflashnewstamil #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #aanmegamnews #formers #todaystamilnadunews #nelmootaigal #indiabusinesstoday #crimenews #kanchipuramcrime #
Comments & Conversations - 0