• முகப்பு
  • india
  • மோடியின் மோதல் போக்கும் தெலுங்கானாவின் தில்லும்.

மோடியின் மோதல் போக்கும் தெலுங்கானாவின் தில்லும்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தெலுங்கானாமாநில முதல்வர் கே. சந்திர சேகர ராவ், பாஜக வோடு கடுமையாக மோதிவருகிறார். ஹைதராபாத் பாஜக தேசிய செயற்குழு கூட்டம், அதை ஒட்டிய பொதுக் கூட்டங்களில் பேசிய பிரதமர் மோடி கே. சந்திரசேகர ராவை குறிவைத்துத்தாக்கினார். சந்திர சேகர ராவும், கறுப்புப்பணம் மீட்பு, வங்கிக்கணக்குகளில் போடுவதாக கூறிய ரூபாய் 15 லட்சம், ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை மோடிக்கு நினைவுபடுத்தி- அவையெல்லாம் என்னாயிற்று? என சுடச் சுட பதிலடி கொடுத்தார். இதனிடையே, பாஜக வினர், ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சிக்கு எதிராக தகவலறியும் உரிமைச்சட்டத்தைக் கையில் எடுத்தனர். தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவின் ஊதியம், செலவினம், அண்மையில் அண்டை மாநிலங்களுக்கு மேற் கொண்ட பயணங்களுக்கு ஆன செலவு உள்ளிட்ட தகவல்களைக்கேட்டு நூற்றுக்கும்மேற்பட்ட மனுக்களை தெலுங்கானா பாஜக வினர் தகவலறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அனுப்பினர். இதன் மூலம் சந்திரசேகர ராவ் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் முயற்சியில் இறங்கினர். இதையடுத்து, பாஜக எடுத்த அஸ்திரத்தை, அதற்கு எதிராகவேதிருப்பி தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி பதிலடி கொடுத்து உள்ளது. பிரதமர் நரேந்திரமோடியின் வெளிநாட்டுச்சுற்றுலாவுக்கு ஆன செலவுகள் குறித்து தகவலறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மனு அளிக்க தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி முடிவு செய்து உள்ளது. பிரதமர்மோடியின் அலுவலகம் மற்றும் மத்திய நிதியமைச்சகம், உள்துறை அமைச்சகம், வெளி விவகாரத்துறை மற்றும் இதர முக்கியமான ஒன்றிய அமைச்சகங்களிடமும் இதுத்தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. பிரதமர் மோடியின் வெளி நாட்டுப்பயணங்களுக்கு ஆன செலவுத் தொகை மட்டுமல்லாமல், அவரது ஆடைகளுக்கு செலவிடப் பட்ட தொகை குறித்தும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி கேள்வி எழுப்பி உள்ளது. நிலக்கரி இறக்குமதிவிஷயத்தில் மேடையில் மோடியைபிய்த்து உதறிய தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவ். "உங்களுக்கு வேறு வழியில்லை, நீங்கள் உங்கள் முதலாளிகளை ஆதரித்து தான் ஆக வேண்டும். அதற்காக நீங்கள் மாநில அரசுகளின் மீது அதிகாரம் செலுத்தி பத்து சதவீதம் நிலக்கரியை உங்கள் தனியார் முதலாளிகளிடம் அதிக விலைக்கு வாங்கச்சொல்லி வற்புறுத்துகிறீர்கள். இல்லா விட்டால் கோல் இந்தியாவின் நிலக்கரி சப்ளை நிறுத்தப் படும் என்று மிரட்டுகிறீர்கள். இதென்ன ரெளடியிசமா? வலுக்கட்டாயமா? மாநிலஅரசுகளை மானம், மரியாதையுடன் நடத்தும்முறையா? அதனால்நான் தனியாரிடம் அதிக விலைக்கு நிலக்கரி இறக்குமதிசெய்ய மறுத்து விட்டேன். உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் என்று கூறிவிட்டேன். என்சொந்த மாநிலத்தில் சிங்கரேணி நிலக்கரி சுரங்கம் உள்ள போது அதைநான் உபயோகிப்பேன். நான் ஏன் தனியாரிடம் அதிகவிலைக்கு இறக்குமதி செய்ய வேண்டும். இந்திய நிலக்கரி டன் ரூபாய் 4000 க்கு கிடைக்கும் போது நான் ஏன் மோடியின் நண்பர்களிடம் ரூபாய் 25000 முதல் ரூபாய் 30000 க்கு 7 மடங்கு விலைகொடுத்து இறக்குமதி செய்ய வேண்டும்? காரணம் என்ன வென்றால் நிலக்கரியை விற்பவன் மோடியின்குஜராத்தி நண்பன். அதனால் தான் நான் சொல்லுகின்றேன், மோடி பிரதமமந்திரி வேலை செய்யவில்லை, அவரின் குஜராத்திநண்பர்களுக்கு சேல்ஸ் மேன் வேலையை செய்கிறார் என்று. நான் உங்கள் நிலக்கரி இறக்குமதி பாலிசி மீது பகிரங்கமாய் குற்றம் சுமத்துகிறேன். நாட்டு மக்களின்முன்பாக உங்களிடம் சவால் விடுகிறேன். நான்கேட்கும் கேள்விகளுக்கு உங்கள்பதில் என்ன? விளக்கம் என்ன? நீங்கள் குற்றம் அற்றவராய் இருந்தால் மக்கள் முன் உங்கள் பதிலைக்கூறுங்கள் பார்க்கலாம்." என்றார். செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended