Author: THE GREAT INDIA NEWS

Category: district

பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் பேருந்து நிலையத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பங்கேற்ற வெல்கம் டு நம் ஊர் சென்னை என்ற விழிப்புணர்வு குறும்பட காட்சி செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிநவீன மின்னனு வீடியோ வாகனத்தில் திரையிடப்படுவதையும், செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு தன் புகைப்படம் (selfi spot) எடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் பொதுமக்களுடன் பார்வையிட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார். முன்னதாக பூலாம்பாடி புதூர் பகுதியில் புதிய வழித்தட பேருந்து சேவையினையும், நகரும் நியாய விலை அங்காடி வாகன சேவையினையும், சத்திரமனையில் பேருந்து வழித்தட நீட்டித்த சேவையினையும், செட்டிகுளம் பகுதிக்கு கூடுதல் நடை பேருந்து சேவையினை போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ,ப., அவர்கள், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் அவர்கள், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் சி.ராஜேந்திரன் அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருகின்றது. முதலமைச்சர் அவர்கள் மக்களுக்கு தேவையான திட்டங்களை அறிந்து அது கடைக்கோடி மக்கள் வரை சென்றடைவதில் தனி கவனம் செலுத்துவதனால் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது. முதலமைச்சர் அவர்கள் வழங்கி இருக்கக்கூடிய அறிவுரையின் படி எங்கெல்லாம் பேருந்து போகாத கிராமம் இருக்கிறதோ அங்கெல்லாம் பேருந்து இயக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் இன்று பூலாம்பாடி புதூர் கிராமத்திற்கு பொது மக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் பயன் பெரும் வகையில் முதன் முதலாக பேருந்து வழித்தடம் நீட்டித்த சேவை தொடங்கி வைக்கப்பட்டது. இப்பேருந்து காலை 7.30 மணிக்கு பெரம்பலூரிலிருந்து பூலாம்பாடி வழியாக பூ.புதூர் சென்றடையும், பகல் 1.35 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் பூ.புதூர் கிராமத்திலிருந்து பெரம்பலூருக்கு புறப்படும், அதை போல காலை 9.25 மணிக்கு மங்கூனிலிருந்து சத்திரமனைக்கும், மாலை 4.30 மணிக்கு சத்திரமனையிலிருந்து மங்கூனிற்கும் பேருந்துகள் இயக்கப்படும். காலை 7.50 மணிக்கு துறையூரிலிருந்து செட்டிகுளம் வழியாக பாடாலூருக்கும், மாலை 4.30 மணிக்கு பாடாலூரிலிருந்து செட்டிகுளம் வழியாக துறையூருக்கும் பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டது. முன்னதாக பூ.புதூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கயினை ஏற்று கடம்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திலிருந்து நகரும் நியாய விலை அங்காடியின் மூலம் உணவுப் பொருட்கள் விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நகரும் அங்காடியானது மாதத்தின் முதல் சனிக்கிழமையும், கடைசி சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் அப்பகுதிக்கு வருகை தந்து குடும்ப அட்டை தாரர்களுக்கு உணவுப் பொருட்களை வினியோகம் செய்யும். இந்நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் நா.அங்கையற்கண்ணி, போக்குவரத்துக்கழக கும்பகோணம் மண்டல மேராண்மை இயக்குநர் ராஜ்மோகன், திருச்சி போக்குவரத்துக்கழக பொது மேலாளர் சக்திவேல். கூட்டுறவுத் துணைப் பதிவாளர்கள் செல்வராஜ், பாண்டித்துரை, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் முத்தமிழ்ச்செல்வி மதியழகன், ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர்கள் ராமலிங்கம்(வேப்பந்தட்டை), மீனா அண்ணாதுரை (பெரம்பலூர்), பூலாம்பாடி பேரூராட்சி தலைவர் பாக்கியலெட்சுமி செங்குட்டுவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் செய்தியாளர் ஜஹாங்கீர்.

Tags:

#perambalurnewstamiltoday #perambalurnewspapertamil #perambalurnewstodaytamil #இன்றையசெய்திகள்பெரம்பலூர் #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #indrayaseithigalperambalurtamilnadu #indrayaseithigaltamilnadu #todaynewsperambalur #todaynewsperambalurtamilnadu #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #perambalurtodaynews #perambalurlatestnews #perambalurnews #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #aanmegamnews #todaystamilnadunews #chess #chessolympiad #chessolympiad2022 #chess2022 #olympiad2022 #indiabusinesstoday #peoplestruggle
Comments & Conversations - 0