• முகப்பு
  • district
  • கூடலூர் ஊராட்சியில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித்தலைவரின் மக்கள் தொடர்பு முகாமில் 361 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார்.

கூடலூர் ஊராட்சியில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித்தலைவரின் மக்கள் தொடர்பு முகாமில் 361 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் கூடலூர் ஊராட்சியில் இன்று (13.07.2022) நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர் மக்கள் தொடர்பு முகாமில் மாண்புமிகு மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீவெங்கடபிரியா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் 361 பயனாளிகளுக்கு ரூ.4.72கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆட்சியில் மக்களை தேடி மாவட்ட நிர்வாகத்தில் உள்ள அனைத்து துறை அலுவலர்களும் நேரில் வந்து குறைகளை கேட்டறிந்து அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் வகையிலான மக்கள் தொடர்பு முகாம்கள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றது. தன்னுடைய உடல் நலனையும் கருத்தில் கொள்ளாது தமிழ்நாட்டு மக்களின் நலன் ஒன்றையே சிந்தித்து மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கி வருகின்றார்கள். அந்த வகையில் இன்று ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கூடலூர் ஊராட்சி பகுதி மக்களுக்கு சுமார் ரூ.4.72கோடி மதிப்பில் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றது. இந்த மக்கள் தொடர்பு முகாமில் பல்வேறு துறைகளின் அரசு உயர் அலுவலர்கள் தங்கள் துறை சார்ந்து செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், அந்த திட்டங்களில் பயனடைவதற்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும், என்னென்ன தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் என்பது குறித்து உங்கள் அனைவருக்கும் விரிவாக எடுத்துரைத்தார்கள். உங்களின் தேவைகளுக்கு ஏற்ப அரசின் திட்டங்களை அனைவரும் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், வருவாய் துறை சார்பில் இலவச வீட்டுமனை பட்டா, நத்தம் பட்டா, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, ஆதரவற்ற விதவைகளுக்கான உதவித்தொகை, புதிய குடும்ப அட்டைகள், உழவர் நலன் மற்றும் வேளாண் துறை சார்பில் வேளாண் கருவிகள், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் இலவச தையல் இயந்திரங்கள், கூட்டுறவுத் துறையின் சார்பில் கடனுதவிகள், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள் என பல்வேறு திட்டங்களின் மூலம் 361 பயனாளிகளுக்கு ரூ.4.72 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆலத்துார் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திரு.கிருஷ்ணமூர்த்தி, துணைத்தலைவர் திருமதி.மு.சுசீலா, வருவாய் கோட்டாட்சியர் திருமதி.ச.நிறைமதி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் திரு.சரவணன், ஆதிதிராவிடர் நல அலுவலர் திரு.பால்பாண்டி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி பொம்மி, உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் செய்தியாளர் ஜஹாங்கீர்.

VIDEOS

RELATED NEWS

Recommended