கம்பம் அருகே மினி மாரத்தான் போட்டி!!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தேனி மாவட்டம் கருநாக்கமுத்தன் பட்டியில் அந்த ஊரைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர்கள் சார்பில் இளைஞர்களுக்கு விளையாட்டு விழிப்புணர்வை ஏற்படுத்த மினி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்திய ராணுவ வீரர்கள் சார்பாக இளைஞர்களின் உடல்நலம் மற்றும் விளையாட்டு விழிப்புணர்வுக்காக நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியை, கூடலூர் காவல் ஆய்வாளர் எம்.பிச்சைப் பாண்டியன் தொடங்கி வைத்தார். அரசு கள்ளர் ஆரம்ப பள்ளியில் தொடங்கி சுருளி அருவி சாலையில் உள்ள அரண்மணைப் பாலம் வரை சுமார் 5 கிலோமீட்டர் தூரம் நடைபெற்றது. நாராயணத்தேவன் பட்டியைச் சேர்ந்த பிரனேஷ் முதலிடத்தையும், தேனி குருபிரசாத் இரண்டாம் இடத்தையும், காமயகவுண்டன் பட்டியைச் சேர்ந்த கருணேஷ் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். இந்திய ராணுவ வீரர்கள் சார்பில் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. ஊராட்சி தலைவர் அ.மொக்கப்பன், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் தமயந்தி, ஒன்றிய கவுன்சிலர் சி.தமிழரசன் உள்ளிட்ட ஏராளமான பேர் கலந்து கொண்டனர். தேனி மாவட்ட செய்தியாளர் MP. ஜீவா

VIDEOS

RELATED NEWS

Recommended