• முகப்பு
  • சித்ரா பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

சித்ரா பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவண்ணாமலை : சித்ரா பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. அதிகாலை 4 மணி முதல் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் நேற்று இரவு முதல் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். காலை சுமார் 10 மணி வரை ஏராளமான பக்தர்கள் சாலையை அடைத்தபடி கிரிவலம் சென்றனர். கோடை காலம் என்பதால் நேரம் செல்ல, செல்ல வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. இதனால் காலை 10 மணியில் இருந்து மாலை 4 மணி வரை கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் குறைந்தது. இருப்பினும் பலர் சாலையில் நடந்து செல்லாமல் நிழல் எங்கு உள்ளது என்று பார்த்து, பார்த்து நடந்து சென்றனர். சிலர் தரையின் சூடு தாங்காமல் சாலையில் ஓடிச் சென்றனர். கிரிவலப்பாதையில் காணும் இடமெல்லாம் பக்தர்களுக்கு தண்ணீர் மற்றும் மோர் வழங்கப்பட்டது. லாரியில் மோர் எடுத்து வந்து தண்ணீர் பந்தலில் உள்ள டிரம்களில் நிரப்பப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் போக்குவரத்து, பொதுமக்கள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த 3,500 போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டனர். திருவண்ணாமலை செய்தியாளர் பாலாஜி. இன்றைய செய்திகள் திருவண்ணாமலை தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,Thiruvannamalai news,ஆன்மீகம்,anmeegam,anmigam,anmegam,Todays tamil news

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended