• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • பரமக்குடி வைகையாற்றில் தண்ணீர் பாய்ந்தோடி வருவதால் வியாபாரிகள்...பக்தர்கள்... பொதுமக்கள்... அதிர்ச்சி... குழந்தைகள் பரிதவிப்பு...

பரமக்குடி வைகையாற்றில் தண்ணீர் பாய்ந்தோடி வருவதால் வியாபாரிகள்...பக்தர்கள்... பொதுமக்கள்... அதிர்ச்சி... குழந்தைகள் பரிதவிப்பு...

மாமுஜெயக்குமார்

UPDATED: May 6, 2023, 9:58:48 AM

சித்திரை மாதம் பிறந்தது முதல் மதுரை, பரமக்குடி கள்ளழகர் திருவிழா நடைபெறுமென தமிழக மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்படுவது மட்டுமல்ல, கள்ளழகரை தரிசிக்க மக்கள் வெள்ளமென திரண்டு வருவதும் காலம்...காலமாய் நடந்து வருகிறது.

மேலும், பரமக்குடி திருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் ராட்டினத்தில் சுற்றி மகிழலாமென குழந்தைகள் முதல் இல்லத்தரசிகள் வரை வெகு ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந் நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஸௌராஷ்ட்ர பிராஹ்மண மஹாஜனங்களுக்கு சொந்தமான ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோவிலின் கோடைத்திருவிழா என்னும் சைத்ரோத்ஸவம் 12 நாட்கள் கோலாகலமாக நடைபெறுகிறது.

கடந்த 30-ந் தேதி ஞாயிறு கோடைத் திருவிழா ஆரம்பமாகி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

இதனையொட்டி, திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மதுரைக்கு இணையாக 05-ந் தேதி வெள்ளி விடியற் காலை ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு வைகையாற்றில் இறங்கினார்.

வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சியே சாரல் மழையுடன் நடந்தது.

இந் நிலையில், 05-ந் தேதி வெள்ளி இரவு வண்டியூர் எனும் காக்காத்தோப்பு நிகழ்ச்சியன்று வர்ண பகவான் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மழை பொழிவு இல்லாததால், பக்தர்கள், குழந்தைகள், பொதுமக்கள் குடும்பத்தினருடன் பெருமாள்கோவில் படித்துறை வைகையாற்றிலும்,

காக்காத்தோப்பு மண்டகப்படி வைகையாற்றிலும் அமர்ந்து குதூகலமாக பேசி, உணவு, ஸ்நாக்ஸ் சாப்பிட்டு மகிழ்ந்தனர். குழந்தைகள், இளம் இல்லத்தரசிகள் ஜெயின் வீல், கப் அண்டு சாசனம், படகு போன்று பல்வேறு ராட்டினங்களில் சுற்றி மகிழ்ந்தனர்.

இந் நிலையில், 06-ந் தேதி சனி இரவு வாணியர் உறவின்முறையார்கள் சார்பில் நடைபெறும் மண்டகப்படியில், விடிய... விடிய... கள்ளழகரின் தசாவதாரக் காட்சிகள் நடைபெறுவது வழக்கம். இதனை காண பக்தர்கள் குடும்பம்... குடும்பமாக...வைகையாற்றுக்கு வந்து சாமி தரிசனம் செய்வதோடு, வைகையாற்றில் அமர்ந்து பேசி...உண்டு... ராட்டினங்கள் சுற்றிச் செல்வர்.

இதனிடையே, 06-ந் தேதி சனி நண்பகலில் வைகையாற்றில் தண்ணீர் பாய்ந்தோடி வந்ததால், பக்தர்கள்...வியாபாரிகள்... பொதுமக்கள்...அதிர்ச்சியடைந்ததுடன்...குழந்தைகளும், இளம் இல்லத்தரசிகளும் பரிதவித்துள்ளனர்.

வியாபாரிகள் ஆற்றில் தண்ணீர் வந்தால் மக்கள் எப்படி வருவார்கள், கூட்டம் இல்லாமல் வியாபாரம் எப்படி நடைபெறுமென அதிர்ச்சியும், ராட்டினங்கள் இயங்கா விட்டால் எப்படி சுற்றி மகிழ்வதென குழந்தைகள், இளம் இல்லத்தரசிகள் பரிதவித்தும், தசாவதாரக் காட்சிகளைக் கண்டு சாமி தரிசனம் எப்படி செய்வதென பக்தர்கள்... பொதுமக்கள்..அதிர்ச்சியடைந்துள்ளனர். ராட்டினம் அமைத்த ஒப்பந்ததாரர்களும் பரிதவித்தும்...அதிர்ச்சியும்... அடைந்துள்ளனர்.

மேலும், 06-ந் தேதி சனி காலை முதல் சூர்ய பகவான் வருகை இல்லாமல் மேக மூட்டத்துடனேயே வானம் இருப்பதால் எந் நேரமும் மழை பெய்யுமோ ? என்ற அச்சம் நிலவியுள்ளது.

வழக்கமாக, கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக வைகை அணையிலிருந்து மதுரை வைகையாற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

ஆனால், தற்போது தொடர் மழை காரணமாக மதுரை வைகையாற்றில் வந்த தண்ணீருடன் மழைத் தண்ணீரும் சேர்ந்து வருவதால் மானாமதுரை, பரமக்குடி வைகையாற்றிலும் தண்ணீர் பாய்ந்தோடி வருகிறது.

இதனிடையே, திருவிழாவை சிறப்பாக நடத்துவதற்கு ஏதுவாக வைகையாற்றில் பாய்ந்தோடி வரும் தண்ணீரை தடுக்கும் விதத்தில் ஜெசிபி இயந்திரம் மூலம் தண்ணீர் உள்ளே வராதவாறு தடுக்கும் பணியை மண்டகப்படிகாரர்கள், சம்மந்தப்பட்டவர்கள் போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended