Author: THE GREAT INDIA NEWS

Category: district

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை கிராமப்புற மாணவ மாணவிகள் சுமார் 700க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று பேரூராட்சி மன்ற தலைவர் செல்வி ஆனந்தன் மற்றும் கழக சங்கத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையாசிரியர் குமரேசன் , உதவி தலைமை ஆசிரியர் பொன்மணி ஆகியோர் தலைமையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து மேலாண்மை குழுவில் 20 நபரை தேர்வு செய்தனர். இந்நிலையில் பேரூராட்சி மன்றத்தலைவர் செல்வி ஆனந்தன் பள்ளியில் மதில் சுவர் மற்றும் கழிவறை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க உரிய ஒத்துழைப்பு தர வேண்டும் என்று உறுப்பினர்களுக்கு கோரிக்கை வைத்தார். இந்த பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்கள் அனைவரும் கிராமப் பகுதிகளிலிருந்து வந்து பயின்று வருகின்றனர் . அதனால் மாணவர்களுக்கு மதிய உணவு தரம் உள்ளதாக செய்து கொடுக்க படியும் கோரிக்கை வைத்தார். இந்தப் பள்ளி மென்மேலும் வளர்ச்சி அடைய பெற்றோர் கழக தலைவர் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் , ஆசிரியர்கள் உறுதுணையாக செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம்.

Tags:

#cuddalorenews #cuddalorenewstoday #cuddalorenewstodaylive #srimushnamnews #srimushnamlatestnews #governmentschool #students #srimushnamtodaynews #cuddalorenewsyesterday #cuddalorenewsintamil #cuddalorenewspapertoday #இன்றையசெய்திகள்கடலூர் #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #indrayaseithigalcuddalore #todaynewscuddaloretamilnadu #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #aanmegamnews #todaystamilnadunews #indiabusinesstoday #neyvelinewstoday #peoplestruggle
Comments & Conversations - 0