• முகப்பு
  • இலங்கை
  • மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம்-பல்வேறு விடையங்கள் குறித்து விரிவாக ஆராய்வு.

மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம்-பல்வேறு விடையங்கள் குறித்து விரிவாக ஆராய்வு.

மன்னார் = ரோசெரியன் லெம்பர்ட்

UPDATED: May 30, 2023, 6:11:47 PM

மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்று (30) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஏ.ஸ்டான்லி டி மெல் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் தலைமையில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் காலை 10 மணி அளவில் ஆரம்பமானது.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன்,எஸ்.வினோ நோகராதலிங்கம், சார்ள்ஸ் நிர்மலநாதன், குலசிங்கம் திலீபன், வடமாகாண பிரதம செயலாளர் ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

குறித்த அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் தாழ் நில பிரதேசங்களில் காணப்படும் குளங்கள் அவசரமாக புனரமைப்பது சம்பந்தமாகவும், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை சம்பந்தமாகவும்,தொடராக பேசப்பட்டு வரும் காணிப் பிரச்சினைக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுப்பது சம்பந்தமாகவும்,வீதி அபிவிருத்தி , கல்வி , சுகாதாரம்,மீன்பிடி, வனவளம், நீர்ப்பாசன திணைக்களம்,போக்குவரத்து, முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாடு, போன்ற இதர விடயங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டு தீர்வுகளும் எட்டப்பட்டன .

குறித்த மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய 5 பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், முப்படை பிரதானிகள், அரச பதவி நிலை, உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended