• முகப்பு
  • world
  • போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காக மரண வாசலில் மலேசியர்கள்!

போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காக மரண வாசலில் மலேசியர்கள்!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மலேசியா : தூக்குத் தண்டனையை ரத்துச்செய்ய வேண்டும் என மலேசியாவில் குரல் எழுப்பப்பட்டு வருகிறது. அரசாங்கம் இது குறித்து உறுதியான முடிவெதையும் இன்னும் எடுக்கவில்லை. ஆனால், நமது அண்டை நாடான சிங்கப்பூரில் போதைப்பொருள் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்காக மலேசியர்கள் தூக்கிலிடப்படுகின்றனர், இன்னும் சிலர் தண்டனை நிறைவேற்றத்திற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். நாகேந்திரன் தர்மலிங்கம் எனும் 34 வயது மலேசியர் கடந்த புதன்கிழமை தூக்கிலிடப்பட்டார். இவர் மீது போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது. போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக உலகின் மிகவும் கொடுமையான ஒரு தண்டனையாக இது கருதப்படுகிறது. இதனிடையே, நாகேந்திரனுக்கு அடுத்து நேற்று வெள்ளிக்கிழமை தூக்கிலிடப்படவிருந்த 36 வயது கே.தட்சணாமூர்த்தி என்ற மற்றொரு மலேசியரின் தண்டனை இறுதி நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. தட்சணாமூர்த்திக்கு நேற்று தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தால் 2016 முதல் சிங்கப்பூரில் போதைப்பொருள் குற்றங்களுக்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ஆறாவது மலேசியராக அவர் விளங்கியிருப்பார். தட்சணாமூர்த்தியை தவிர்த்து இன்னும் எட்டு மலேசியர்கள் தங்களின் மரண தண்டனை நிறைவேற்றத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர் என சிங்கப்பூரின் மனித உரிமைகள் வழக்கறிஞரான ரவி மாடசாமி கடந்த 2022 பிப்ரவரி மாதம் சிங்கை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்த வாக்குமூல ஆவணங்கள் தெளிவாகக் காட்டின என்று மலாய் மெயில் தகவல் வெளியிட்டுள்ளது. 2010 முதல், மொத்தம் 14 மலேசியர்கள் சிங்கையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றத்திற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களில் முக்கால்வாசியினர் இந்தியர்களே. 11 பேர் பட்டியலில் உள்ளனர். இருவர் மலாய்க்காரர்கள், ஒருவர் சீனர். அதே சமயம், மேல் முறையீட்டின் வாயிலாக தங்கள் குற்றச்சாட்டுகள் அல்லது தண்டனைகள் மாற்றப்பட்ட 37 குற்றவாளிகளில் 13 பேர் மலேசியர்கள் ஆவர். அவர்களில் எழுவர் சீனர்கள், ஐவர் இந்தியர்கள் மற்றும் ஒருவர் மலாய்க்காரர் ஆவார். தட்சணாமூர்த்தியின் மேல் முறையீடு வரும் மே 20 ஆம் தேதி செவிமடுக்கப்படும் என்று மனித உரிமைகள் வழக்கறிஞர் ஜாய்ட் மாலெக் கூறியதாக மலாய் மெயில் குறிப்பிட்டுள்ளது. ஆனால், போதைப்பொருள் குற்றவாளிகளுக்கான தண்டனையிலிருந்து சிங்கப்பூர் பின்வாங்கியதாக சரித்திரம் கிடையாது என்பதை ரவி நினைவூட்டினார். சிங்கப்பூர் இச்சட்டத்தைக் கண்டிப்பாகப் பின்பற்றி வருகிறது. மரண தண்டனையை விமர்சனம் செய்பவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் கூறும் பதில்களே இதற்கு ஆதாரம். எனினும், இவ்வாறு நடந்து கொள்வதன் வழி, குறிப்பாக மாற்றுத் திறனாளிகள், அவர்களின் குடும்பத்தினரின் உணர்வுகளை அது அலட்சியம் செய்து வருகின்றது என்றார் ரவி. போதைப்பொருள் குற்றங்களுக்காக சிங்கப்பூரில் தண்டனை பெற்றவர்களில் மலாய்க்காரர்கள் அதிகமாக இருப்பதாக ரவி தனது வாக்குமூல பதிவுகளில் கூறியிருக்கிறார். மலாய்க்காரர்கள் மொத்தம் 77 பேர் உள்ளனர். அவர்களில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள 14 மலேசியர்கள் அடங்குவர். மொத்த எண்ணிக்கையில் 15 இந்தியர்கள், 10 சீனர்கள், இரு மற்ற நாடுகளின் பிரஜைகள் ஆவர். சிங்கப்பூர் மக்கள் தொகையில் 13.5 விழுக்காட்டினராக மலாய்க்காரர்கள் இருந்த போதிலும் 2021 ஜூன் மாதம் வரையில் போதைப்பொருள் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட சிங்கை குடியிருப்பாளர்களில் 77 விழுக்காட்டினர் மலாய்க்காரர்களாக உள்ளனர். இது 2010 முதலான கணக்காகும். போதைப்பொருள் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்காக இதுவரை நான்கு மலேசியர்களுக்கு சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் ஒருங்கிணைந்த மின்னியல் வழக்கு முறையின் கீழ் இத்தகவல்கள் பெறப்பட்டுள்ளன. செய்தியாளர் பாஸ்கர். இன்றைய செய்திகள் உலகம்,இன்றைய முக்கிய செய்திகள் உலகம்,இன்றைய செய்திகள் உலகம்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest india news tamil,Tamil news daily,District news,india news live,world news tamil,world news,world news in tamil today,world news today in tamil,malaysia news latest news,singapore news today,Malaysians on the verge of death for drug trafficking offenses

VIDEOS

RELATED NEWS

Recommended