சினிமாவை ரசித்த மயில்சாமி அண்ணாதுரை

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

இஸ்ரோவில் மீண்டும்வாழ்ந்தது போன்றஉணர்வு எனக்கு ஏற்பட்டு உள்ளது என்று மாதவன் நடிப்பில் வெளியான ' ராக்கெட்ரி ' திரைப்படம் குறித்து பிரபலவிஞ்ஞானி மயில் சாமி அண்ணாதுரை பாராட்டி உள்ளார். இஸ்ரோசெயற்கைக்கோள் மையத்தின் முன்னாள் இயக்குனரும், சந்திரயான், மங்கள்யான் திட்டங்களில் முக்கியப்பங்கு வகித்தவருமான விஞ்ஞானிமயில் சாமி அண்ணா துரை ”ராக்கெட்ரி” திரைப்படம் குறித்து டுவிட்டரில் தனதுபாராட்டை தெரிவித்து உள்ளார். அதில் “ராக்கெட்ரி” படமல்ல வரலாற்றுகாவியம் . விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு நிகழ்ந்ததுபோன்ற அநீதி இனியாருக்கும் நிகழக் கூடாது என்ற மாதவனின் மிஸன் தான் இப்படம். மாதவனின் எண்ணங்கள் மக்களிடையே சென்று அடைந்து உள்ளது. நான் முப்பத்தாறு ஆண்டுகள் இஸ்ரோவில் பணியாற்றினேன். இப்படத்தை நான் பார்த்தபோது, மீண்டும் இஸ்ரோவில் வாழ்ந்ததுபோன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டு உள்ளது. இந்த படத்தை கொடுத்தற்காக மாதவனுக்கு எனது சல்யூட் இவ்வாறு அவர் கூறி உள்ளார். செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended