• முகப்பு
  • tamilnadu
  • LKG, UKG வகுப்புகள் அரசு பள்ளிகளில் மூடப்படவில்லை.

LKG, UKG வகுப்புகள் அரசு பள்ளிகளில் மூடப்படவில்லை.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

எல்கேஜி, யுகேஜி வகுப்பு ஆசிரியர்கள் இடை நிலை வகுப்புகளுக்கு மாற்றப் பட்டுள்ளனர். - அரசு விளக்கம் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்புகளை கையாள அதிக ஆசிரியர்கள் தேவைப் படுவதால் அவர்கள் தொடக்கப்பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டில் 2381 அங்கன் வாடி மையங்களை அரசு பள்ளிகளுடன் இணைத்து கடந்த 2019 - 20 ஆம் கல்வியாண்டு முதல் எல்கேஜி., யுகேஜி. வகுப்புகள் நடத்தப் பட்டு வருகின்றன. இங்கு சேரும் குழந்தைகளுக்கு பாடம் நடத்த தொடக்கக் கல்வி இயக்ககம்சார்பில் ஆசிரியர்களும் பணிக்கு நியமிக்கப் பட்டு வகுப்புகள் நடத்தப் பட்டுவந்தது. இந்தநிலையில் தற்போது மீண்டும் இந்த விஷயம் பரபரப்பாக பேசப் பட்டுவருகிறது. நடப்பு கல்வியாண்டில் கல்வித் துறைசார்பில் 2381 அங்கன் வாடி மையங்களில் எல்கேஜி., யுகேஜி. வகுப்புகளில் மாணவர்சேர்க்கை நடத்தப் படாது என்று கூறப்பட்டது. இது குறித்து கல்வித் துறையிடம் கேட்ட போது, அங்கன் வாடி மையங்கள் வழக்கம் போல் செயல் படும் என்றும், அதற்கான முழுபொறுப்பு சமூக நலத் துறை வசம் ஒப்படைக்கப் பட இருக்கிறது என்றும் தெரிவித்தனர். இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது.... அரசு பள்ளிகளில் எல்கேஜி., யுகேஜி. வகுப்புகள் நிறுத்தப் படவில்லை. அரசு பள்ளியில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இருந்த எல்கேஜி. மற்றும் யுகேஜி. வகுப்புகள் சமூக நலத் துறையின் கீழ் இயங்கும் அங்கன் வாடிக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளது. எனவே அருகில் எங்கு அங்கன் வாடி மையம் உள்ளதோ அங்கு குழந்தைகளை சேர்த்துக் கொள்ளலாம். இதில் பணியாற்றிய ஆசிரியர்கள் ஏற்கனவே இருந்தபடி 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை முழுமையாக ஈடு படுத்தப் படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை தொடக்கக்கல்வி இயக்குநர் இன்று வெளியிட்டு உள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது, மழலையர்வகுப்புகளில் உள்ள குழந்தைகளை கையாள்வதில் சிக்கல், புரிதலின்மையேநீடித்தது. எல்கேஜி. மற்றும் யுகேஜி. வகுப்புகளை கையாள நியமிக்கப் பட்ட ஆசிரியர்கள் இடை நிலை வகுப்புகளுக்கு மாற்றப் பட்டுள்ளனர். 2013 - 14 ஆண்டுக்கு பின், ஆசிரியர்கள் புதிதாக நியமிக்காததால், ஓய்வு பெறும் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப் படாமல் இருந்தன. 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்புகளை கையாள அதிக ஆசிரியர்கள் தேவைப் படுவதால் அவர்கள் தொடக்கப்பள்ளிகளில் பணியமர்த்தபபட்டுள்ளனர். அரசு பள்ளிகளில் எல்கேஜி., யுகேஜி. வகுப்புகள் நிறுத்தப் படவில்லை. எல். கேஜி. மற்றும் யுகேஜி. வகுப்புகள் சமூக நலத் துறையின் கீழ் இயங்கும் அங்கன் வாடிக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது. செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended