இறைவன் சொல்கிறான் கேளுங்கள்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கடந்த காலத்தில் ஞானியர்களுக்கும் மனிதனுக்கும் இருந்த தொடர்பு தவறாக இருந்தது. சித்தர்கள், அவதார புருஷர்கள், தீர்த்தரங்கர்கள், சங்கராச்சாரியார் அவர்கள் சாதாரணமனிதனை விட மிக உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்டார்கள் நீ அவர்களைப் போல் அல்ல என்று தாழ்ந்த இடத்தில் வைக்கப் பட்டாய். இருவருக்கும் இடையில் மிகப்பெரிய பிளவு இடைவெளி இருந்தது. அவர்களைப்பற்றிய ஏராளமான மாயாஜாலங்களையும், கட்டுக் கதைகளையும் நீ நம்பினாய் அப்படி நம்புவது உனக்கு வசதியாக இருந்தது நீ அவர்களைப் போல மாறவேண்டியதில்லை அவர்கள்மேல் அன்பு செலுத்த வேண்டியதில்லை அவர்கள் மேல்மரியாதை மட்டும் தொழுவதை மட்டும் செய்தால் போதும். அவர்கள் உன் ஆசைகளைப் பூர்த்தி செய்வார்கள் என்ற அளவில் அது உனக்கு வசதியாக இருந்தது அவர்களுக்கு விலகி இருப்பதால் அவர்களும் சாதாரணமான மனிதர்கள் என்று தெரியாமல் இந்த கட்டுக்கதைகள் உண்மையானவை போல பேசப்படவாய்ப்பாக இருந்தது. ஆனால் இதனால் எந்தப்பயனும் இல்லை நீ என்னை நேசிக்கவேண்டும். என்னைக்காதலிக்க வேண்டும். என்னுடன் தொடர்புகொள்ள வேண்டும் நீ என்னைக் கடந்துவளர வேண்டும் இதுவே எனதுபார்வை. உன்னைப் போன்று தான்நான் எந்த விதத்திலும் நான் உயர்ந்தவன் அல்ல. உன்னைப்போன்று இருந்த நான் இப்பொழுது தளர்வாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். அப்படியானால் நீயும் அப்படி ஆக முடியும்என்பதற்கு நானே முன்னுதாரனம். நான் உனதுஉற்சாகம் நான் உனது சாத்தியக் கூறு அப்படி நான் தளர்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதால் எந்த அற்புத சக்தியும் எந்த மாயாஜாலமும் எந்த கட்டுக் கதைகளுக்கும் உட்பட்ட ஒருவனாக நான் ஆகுவதில்லை . எனக்கும் உன்னைப் போன்றுதான் பசியும், தூக்கமும், உணர்ச்சிகளும், உணர்வும் உள்ளது நானும் ஒரு சாதாரண மனிதன் தான் இன்னும் சொல்லப்போனால் உன்னைவிட சாதாரணமானவன் கிடைத்த வாழ்வை முழுமையாக ஏற்று வாழ்பவன் மகிழ்வோடு வாழ்பவன் எந்த அதி உயரத்திற்கும் போக முயற்சிக்காத ஒரு சாதாரண மனிதன் அதுவே நான் மகிழ்ச்சியோடும் தளர்வாகவும் இருக்கக் காரணம் ஆகவே நமது உறவு நேசமாக இருக்கட்டும் கடந்த காலத்தைப் போல கட்டுக்கதைகளின் மேல் கட்டப்பட்டதாக இருக்க வேண்டாம் அதனால் எந்தப் பயனும் இல்லை நீ என்னைத் தொழுவதோ, எனக்கு மரியாதை செய்வதோ தேவையில்லை அவசியமற்றது, மேலும் தந்திரமானது அதற்குப் பதிலாக நீ என்னை காதலிப்பதும், நேசிப்பதும் நீ என்னை கடந்து வளர்வதும் தான் நம்மிடையே உள்ள தொடர்பாக இருக்க வேண்டும் ***அனுபவ ஆன்மீகன்***

VIDEOS

RELATED NEWS

Recommended