• முகப்பு
  • india
  • இந்தியாவில் கல்விக்கடனை குறைந்த வட்டியில் கொடுக்கும் பத்து வங்கிகளின் பட்டியல்

இந்தியாவில் கல்விக்கடனை குறைந்த வட்டியில் கொடுக்கும் பத்து வங்கிகளின் பட்டியல்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

இந்தியன் ரிசர்வ் வங்கி சமீபத்தில் ரெப்போவட்டி விகிதத்தை அதிரடியாக உயர்த்திய நிலையில் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்து உள்ளார்கள் . அது மட்டுமின்றி விரைவில் மேலும் நாற்பது புள்ளிகள் வரை வட்டிவிகிதத்தை உயர்த்தப்போவதாக செய்திகள் இப்பொழுது வெளி வந்து கொண்டிருக்கிறது. இதனால் கடன்வாங்குபவர்களுக்கு இனிபெரும் திண்டாட்டம் தான் என்றும், ஏற்கனவே கட்டிவரும் கடனைமுடிக்க அதிகத்தொகை கட்டவேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் உயர்படிப்புக்கு தயாராகும் இளைஞர்களுக்கு இது சோதனையான கால கட்டமாக இருக்கப் போகிறது. கல்விக்கடனுக்கு வட்டிவிகிதம் உயர்த்தப் பட்டால் மாணவர்களுக்கு குறிப்பாக வெளிநாடுசென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்கு மிகப் பெரிய பொருளாதார இழப்பை சந்திக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். சென்ட்ரல் பேங்க்ஆப் இந்தியா வங்கி ரூபாய் இருபது லட்சம் கல்விக்கடனுக்கு 6.85% வட்டி விகிதமும் ஏழு வருடகால அவகாசம்கொண்ட அத்தகைய கடனுக்காக மாதம் ரூபாய் 30,000/- ஆக இருக்கும் மலிவான கல்விக்கடன்களை வழங்கும் முதல் பத்து கடன் வங்கிகளில் இந்திய அரசுக்கு சொந்தமானவங்கியும் ஒன்று இந்த வங்கிகல்விக் கடனுக்கு 6.9 சதவீதம் வட்டிபெறுகிறது, ரூபாய் இருபது லட்சம் கடன் வாங்கினால் மாதத்தவணையாக ரூபாய் 30,088/- செலுத்த வேண்டும். ஆந்திராவங்கி, கார்ப்பரேஷன்வங்கி மற்றும் யூனியன் பாங்க்ஆப் இந்தியா ஆகிய மூன்று வங்கிகளும் ஏழு சதவீத வட்டி விகிதத்தில் கல்விக்கடன் வழங்குகிறது. தோராயமாக இருபது லட்சம் கல்விக் கடன் நீங்கள் வாங்கினால் மாதத்தவணையாக கட்டாயம் ரூபாய் 30,185/- செலுத்த வேண்டும். பாங்க்ஆப் பரோடா மற்றும் பஞ்சாப்நேஷனல் வங்கி ஆகிய இரண்டு முன்னணி பொதுத்துறை வங்கிகளில் 7.15 சதவீத வட்டி விகிதத்தில் கல்விக்கடன் வழங்குகிறது. ஒருவேளை இந்தவங்கியில் நீங்கள் கல்விக் கடன் இருபது லட்சம் ரூபாய் வாங்கினால் ஏழு ஆண்டுக்குள் திருப்பி செலுத்த வேண்டும். இந்தியாவின் மிகப்பெரிய முதன்மை வங்கியான ஸ்டேட்பாங்க் ஆப் வங்கியில் கல்விக்கடனுக்கான வட்டி விகிதம் 7.25 சதவீதமாக உள்ளது. ஏழு ஆண்டுகள் திருப்பி செலுத்தும் காலம்கொண்ட இருபது லட்சம் கடனில் மாதம் ரூபாய் 30,340/- இருக்கும். அதே போல் அரசு வங்கிகளான பேங்க்ஆப் இந்தியா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ்வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப்இந்தியா வாங்கும் வட்டி விகிதத்தை வாங்குகிறது. இந்த வங்கி கல்விக்கடனுக்கு 7.30% சதவீதம் வட்டியை பெறுகிறது, அரசுக்கு சொந்தமான வங்கியில் ரூபாய் இருபது லட்சம் கல்வி கடனுக்கான ஒவ்வொரு மாதமும் 30,480/- தவணை கட்டாயம் செலுத்தவேண்டும். செய்தியாளர் பா. கணேசன்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended