• முகப்பு
  • pondichery
  • சட்ட விதிகளை மீறி பேனர் அச்சிட்டால் உரிமம் ரத்து.

சட்ட விதிகளை மீறி பேனர் அச்சிட்டால் உரிமம் ரத்து.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

புதுவையில் அனுமதியின்றி பொது இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் பேனர், கட்அவுட், கொடிகள் அகற்றுவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.கூட்டத்துக்கு, ஆட்சியர் வல்லவன் தலைமை வகித்தார். காவல், உள்ளாட்சி, பொதுப்பணி, வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். புதுவை திறந்தவெளி அழகியல் சீர்கேடு தடுப்பு சட்டத்தின்படி அனுமதியின்றி பொது இடங்களில் பேனர், கட்அவுட்,  கொடிகள் வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இத்தகைய செயல்கள் தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த நிலையில் புதுச்சேரியில் பேனர்களை 15 தினங்களுக்குள் அகற்றி அது குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது அதற்கான வேலைகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் முதல் கட்டமாக மண்ணாடிப்பட்டு கொம்யூன் பகுதிகளில் உள்ள காட்டேரிக்குப்பம், திருபுவனை, மதகடிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் ஆணையர் எழில்ராஜன் தலைமையில் ஊழியர்கள், போலீஸார், அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்றும் பணியை துவக்கினர். அதையடுத்து பேனர் அச்சிடும் கடைகளுக்கு சென்று பேனர் வைக்க அனுமதி பெறாமல் வருவோருக்கு பேனர் அச்சிட்டால் கடை உரிமம் ரத்தாகும் என்று விளக்க நோட்டீ் தந்து ஆணையர் விளக்கினார். இதுபற்றி ஆணையர் கூறுகையில், அனுமதியின்றி டிஜிட்டல் பேனர்களை அகற்றி, சம்பந்தப்பட்டோரிடம் அபராதம் மற்றும் சட்டரீதியில் நடவடிக்கை எடுக்க போலீஸிலும் தகவல் தெரிவித்துள்ளதாகவும். டிஜிட்டல் பேனர் கடைகளுக்கு நோட்டீஸும் தந்துள்ளோம் என்றார். மேலும் பிரிண்டிங் பேனரில் உரிம எண் அச்சிடுவது அவசியம் என்று தெரிவித்துள்ளோம். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பேனர்களை மட்டுமே அச்சிடவேண்டும் என்று கூறினார். பேட்டி : எழில்ராஜன் ஆணையர். பாண்டிச்சேரி செய்தியாளர் சக்திவேல்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended