காற்றை நீராக மாற்றுவோம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

படத்தில்இருக்கும் இந்தமெஷின் வண்டலூர் உயிரியல்பூங்காவில் இருக்கிறது. இது என்னமெஷின்? அட்மாஸ் பியரில் இருக்கும் காற்றை அப்படியே தண்ணீராக மாற்றித்தரும் இயந்திரம்தான் இது. காற்றில் கிட்டத் தட்ட 3095 கியூபிக்மைல்ஸ் தண்ணீர் இருக்கிறது. 1 கியூபிக்மைல் என்பது 4164 பில்லியன் லிட்டர்கள். 1 பில்லியன் லிட்டர்என்பது 100 கோடிலிட்டருக்கு சமம். எனில் 3095 X 4164 x 100 பெருக்கினால் என்னநம்பர் வருமோ, அத்தனைலிட்டர் தண்ணீர் வளி மண்டலத்தில் இருக்கிறது. சுருக்கமாக புரியும் படி சொல்ல வேண்டு மானால் இவ்வுலகில் ஆறுகளில் ஓடும் தண்ணீரை விட 6 மடங்கு தண்ணீர் வளி மண்டலத்தில் இருக்கிறது. இந்தத்தண்ணீரும் ஒரு ஆண்டுக்கு 40 தடவைகள் மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை காரணிகளால் மறு சுழற்சிக்கு உள்ளாக்கப் படுகிறது. வளிமண்டலத்தில் இருக்கும் காற்றை, இந்த இயந்திரத்தில் இருக்கும் மோட்டார்மூலமாக உள்ளிழுத்து, அதையொரு ஃபில்டர் எனும் வடி கட்டி மூலமாக செலுத்துகிறார்கள். அந்த வடிகட்டி காற்றில் இருக்கும் தூசிகளை வடி கட்டித்தருகிறது. அதன்பின் அந்தசுத்தமான காற்று ஒரு குளிர்விப்பான் அதாவது Condensation unit வழியாக செலுத்தப் படுகிறது. அங்கே காற்றானது குளிர்ந்து அப்படியே நீராக மாறுகிறது. அந்தக்காற்றை மீண்டும் சுத்தி கரித்து, மினரல்களை சேர்த்து, குடிக்கத் தருகிறார்கள். நம்வீட்டில் இருக்கும் ஏசி கூட கிட்டத் தட்ட இதே முறையில் தான் வேலைசெய்கிறது. அந்த ஏசியில் இருந்தும் தண்ணீர் வெளியறும். அதை ஒரு குழாய் மூலமாகநாம் வெளியேற்றி விடுவோம். இங்கே இந்த இயந்திரத்தில் அந்தத்தண்ணீரை பிடித்து, சுத்திகரித்து, மினரல்களை சேர்த்து குடிக்கத்தருகிறார்கள். அவ்வளவு தான் பிராசஸ். இப்படியான மிகசுத்தமான, ஆரோக்கியமான, சுவையான தண்ணீரை உருவாக்கித்தரும் இந்த இயந்திரத்தை தான் ஜப்பான் நாட்டின் NISSAN கார்நிறுவனம் தங்களது CSR ஆக்ட்டி விட்டியின் மூலமாக வண்டலூர் உயிரியல்பூங்காவில் நிறுவித்தந்துள்ளது. இந்த இயந்திரம் ஒருநாளைக்கு கிட்டத் தட்ட ஆயிரம்லிட்டர்கள் தண்ணீரைத் தயாரித்துத்தருகிறது. வண்டலூர் உயிரியில் பூங்காவிற்கு வரும்மக்களின் தாகத்தைத்தணிக்கிறது. அப்படி இருந்தால் தமிழ்நாட்டின் எந்த ஊரிலும் குடிநீர்த்தட்டுப்பாடு வரவே வராது. நிலத்தடிநீர் மட்டமும் குறையாது. *அனுபவஸ்தன்*

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended