• முகப்பு
  • Law_of_attraction ( எதையும் ஈர்க்கும் விதி ) - திருவாசகம் .. இதற்கும் திருவாசகத்திற்கும் என்ன சம்பந்தம் ?

Law_of_attraction ( எதையும் ஈர்க்கும் விதி ) - திருவாசகம் .. இதற்கும் திருவாசகத்திற்கும் என்ன சம்பந்தம் ?

Kanishka

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

இன்றைய நவீன உலகில், உலகம் முழுவதும் பொதுவாக பேசப்படுவது Law_of_attraction என்ற பிரபஞ்ச ஆற்றலை பயன்படுத்தி நமக்கு தேவையானதை நம்மிடம் எப்படி ஈர்ப்பது என்பதே .. பொதுவாக பிரபஞ்ச ஆற்றல் ( இறைப்பேராற்றல் ) எங்கும் எதிலும் நிறைந்து இருக்கு, அதை உங்களுள் உங்களை மீறி இயக்கும் பிரபஞ்ச ஆற்றலோடு பொருத்தி அதை நம்மிடம் ஈர்ப்பது என்பதே .. இதை மேலோட்டமாக பார்க்கும் போது ஏதோ "சூ மந்திரகாளி " என்று சொல்லி பொன், பொருள் போன்றவற்றை நம்மிடம் கொண்டு வருவது போலவே தெரியும் ஆனால் இது மனம், எண்ணம், கவனம் போன்றவற்றை ஏதோ ஒரு தேவையின் மீது இருத்தி, அது நம்மை அடையும் என்று திடமாக நம்மை நாமே நம்ப செய்து நம்முள்ளே இருக்கும் பிரபஞ்ச ஆற்றலை அதை நோக்கி சிந்தித்து, நம்பி, நம்ம எண்ணத்தின் வழியே நம் தேவை என்று நினைப்பதின் பிரபஞ்ச ஆற்றலோடு பொருத்தி இறைப்பேராற்றல் வழியே ஈர்ப்பது தான் .. இதை தான் நம் முன்னோர்கள் மிக எளிமையாக " எண்ணம் போல் வாழ்வு " என்று சொன்னார்கள் .. மேற்கூறிய யாவும் சாத்தியம் தான், ஆனால் அதற்கான புரிந்தால் வழிமுறை வெறுமனே பிரபஞ்சம் என்பதை கடந்து, இந்த பிரபஞ்சத்தின் சூட்சமத்தை நம்முள்ளே உணர !! அதாவது இந்த பிரபஞ்சம் என்ற ஒன்று எப்படி இயக்கப்படுகிறது ?? எதனால் இயக்கப்படுகிறது ?? எப்படி எதனுள்ளும் அதுவே நிறைந்திருக்கு ?? அத்தனையும் இயக்கியாலும் பேராற்றல் எது ?? போன்ற தெளிவின்மை உண்டு இப்படி வெறும் மொட்டையாக ஈர்ப்பு என்ற ஒன்றை சொல்லாது இந்த ஈர்ப்பு எப்படி எதையும் தன்னுள் சாத்தியமாகி கொண்டு இருக்கு .. அதை எப்படி அனுபவிப்பது போன்ற மெய்யை #திருவாசகம் நமக்கு அருமையாக ஒரு கிளிப்பிள்ளைக்கு சொல்லித்தருவது போல ஒவ்வொரு நிலையாக சொல்லி நம்மை வழி நடத்துகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் .. ஒரே வரி " ஈர்த்து என்னை ஆண்டு கொண்ட எந்தை பெருமானே " ஈர்ப்பினை எப்படி நம்முள்ளே நிறைந்து இருக்கும் பேராற்றலாகிய சிவம் நம்மை இந்த பரசிவம் என்ற பிரபஞ்சத்தின் பேராற்றலோடு பொருத்தி வைத்திருக்கிறது என்பதையும் .. #திருவண்டபகுதியில் இந்த பிரபஞ்சத்தை எப்படி படைத்திருக்கிறான், அதன்விரிவு எப்படி, அதை இயக்கியாளும் பேராற்றலாகிய சிவம் எப்படி அதை இயக்கி ஆண்டு கொண்டு இருக்கிறது போன்றவை .. இன்றைய நவின உலகம் கூட இதுவரையில் கண்டு பிடிக்காத வகையில் விவரிக்கிறது .. #போற்றி_ திருஅகவல் வழியே நம் பிறப்பு எப்படி நிகழ்ந்தது !! நம் கருவாக ஒவ்வொரு மாதமும் எப்படியெல்லாம் வளர்ச்சி அடைந்தோம், அதிலும் எப்படியெல்லாம் இந்த சிவமாகிய இறைப்பேராற்றல் நம்மை காத்தது !! அடுத்து நம் வளர்ச்சியில் ஒவ்வொரு கால கட்டத்திலும் எப்படியெல்லாம் எதையெல்லாம் அறிந்து, அறிவுறுத்தப்பட்டும் வளர்ந்தோம் !! அடுத்து இதற்க்கு எல்லாம் இது / அது / சமயம் / நாத்திகம் / வேதம் / சாஸ்திரம் போன்றவை தங்களால் என்பது போல மாயை காட்டின அதில் இருந்து எல்லாம் எப்படி சிக்காது வெளியே வருவது .. எல்லாம் ஒரே இறைவன் சிவமே அவனே யாவும் எதிலும் என்றும் என்ற மெய்யை உணராது தடுக்க 6 கோடி மாயாசக்திகள் கடந்து .. அவனே உனுள்ளிருந்து குருவாக உன்னை ஒவ்வொரு நிலையாக கடத்தி .. உன்னுள்ளே நீயே உணரும்படி, அனுபவிக்கும்படி !! உன்னை அவனோடு ( இப்பிரபஞ்ச பேராற்றலோடு ) சமர்ப்பிக்கும் போது .. நீ வேண்டி கூட உனக்கு அருள்வதை கெடுத்துக்கொள்ளாது .. தாயாகவே ஆகி உன் வாயில் உனக்கு ஊட்டுவது போல .. உனக்கு அருளி ஆட்கொள்வான் .. அதற்க்கு மிக அருமையான வரிகள் " பிறிவினை அறியா நிழல் அது போல முன் பின்னாகி முனியாது அத்திசை என்பு நைந்து உருகி நெக்கு நெக்கு ஏங்கி அன்பு எனும் ஆறு கரை அது புரள நன்புலன் ஒன்றி நாத என்று அரற்றி உரை தடுமாறி உரோமம் சிலிர்ப்ப கரமலர் மொட்டித்து இருதயம் மலரக் கண்களி கூர நுண் துளி அரும்ப சாயா அன்பினை நாள்தொரும் தழைப்பவர் தாயே ஆகி வளர்த்தனை போற்றி " அதாவது நிழல் நம்மோடு எப்போதும் உண்டு அதுபோலவே இறைவனின் இருப்பை அனுபவித்து அவனே சர்வமுமாய் நாமே பொலிந்து கொண்டே இருக்கும் பேரன்பை நாம் அனுபவிக்க, நமது புலன்கள் எல்லாம் ஒன்றி பேசமுடியாத நம் உடலில் உள்ள ஒவ்வொரு மயிர்கால்களை மெய்யாகிய இறைப்பேராற்றலின் ஆளுமையை அனுபவிக்க நம் கைகள் மலரின் மொட்டு போல குவிய நம் அகத்தில் இருதயமாக ஆடி இந்த உடல் முழுவதையும் இப்பேராற்றலாக பரவி பிரபஞ்சபேராற்றலோடு ( பரசிவத்தொடு ) நம்முள்ளே (அகசிவமும்) இணைய நம் கண்களில் நம்மை மீறிய கண்ணீர் ததும்ப, நம் புலன்கள், சிந்தை, எண்ணம் போன்றவை யாதொரு அலைக்கழிப்பின் இன்றி இறையன்

VIDEOS

RELATED NEWS

Recommended