• முகப்பு
  • உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா தேரோட்டம் வெகுவிமரிசையாக

உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா தேரோட்டம் வெகுவிமரிசையாக

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள கூவாகம் கிராமத்தில் இந்துக்களின் புராண நூல்களில் ஒன்றான மகாபாரதத்தை நினைவுறுத்தும் வகையில் அமைந்துள்ள கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். மகாபாரதப் போரை குறிக்கும் வகையில் சம்பர்தாயங்களோடு சித்திரை திருவிழா கடந்த 5-ம் தேதி சாகை வார்த்தல் மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்வான தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்வு நேற்று நடைபெற்றது . இதில் தமிழகம் மட்டுமின்றி மும்பை ,டெல்லி , கொல்கத்தா , பெங்களூர் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த திருநங்கைகள் கலந்துகொண்டு மணப்பெண் போல் தங்களை அலங்கரித்து அரவானை கணவராக ஏற்றுக்கொண்டு பூசாரி கையால் தாலி கட்டி கொண்டனர். பின்னர் இரவு முழுவதும் கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இதனை தொடர்ந்து இன்று காலை நடைபெற்ற திரு தேரோட்டத்தில் பல ஆயிரக்கணக்கான பக்தர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்து அரவானை தரிசனம் செய்தனர். அப்போது குவியில் குவியிலாக கற்புரம் ஏற்றி வைத்து தேங்காய் உடைத்து திருநங்கைகள் கும்மியடித்து அரவாணி வழிபட்டனர்.தேரோட்டம் முடிந்தவுடன் திருநங்கைகள் தங்கள் தாலியை துறந்து விதவை கோலத்தில் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி செல்வார்கள் . நாளை தர்மர் பட்டாபிஷேகத்துடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது. கள்ளக்குறிச்சி செய்தியாளர் ஆதி. சுரேஷ். இன்றைய செய்திகள் கள்ளக்குறிச்சி தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,Kallakurichi news,Today tamil news,Latest Kallakurichi news,District news,koovagam,transgender festival,anmigam,aanmeegam,anmeegam

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended