Author: குமரவேல்
Category: மாவட்டச் செய்தி
நெல்லிக்குப்பத்தை அடுத்த டி.குமராபுரம் அருகே நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர் சீனுவாசன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கடலூர் குண்டுசாலை பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் வெங்கடேசன் என்பவர் டாடா ஏஸ் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிவந்தார்.
சந்தேகமடைந்த போலிசார் மேற்படி வாகனத்தை துரத்தி சென்று மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
அதில் 70கிலோ எடையுள்ள 90,000 ரூபாய் மதிப்புள்ள 15மூட்டைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து மேற்படி நபரை கைது செய்து வழக்கு பதிந்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
மேற்படி சோதனையின் போது காவல் உதவி ஆய்வாளர்கள் சந்தோஷ், ஆறுமுகம், சிறப்பு உதவி ஆய்வாளர் பாபு ஆகியோர் உடனிருந்தனர்.
Tags:
#Cuddalorenews , #cuddalorenewstoday , #cuddalorenewstodaylive , #srimushnamnews , #panrutinews #panrutitodaynews #panrutitodaytamilnews #srimushnamlatestnews , #srimushnamtodaynews , #cuddalorenewsyesterday , #cuddalorenewsintamil , #cuddalorenewspapertoday , #இன்றையசெய்திகள்கடலூர் , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigalcuddalore , #todaynewscuddaloretamilnadu ,#Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnewstamil , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews , #tamillatestnews , #todaysindianews , #gutka #drugs #tobacco #tamilpoliticalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday