Author: THE GREAT INDIA NEWS

Category:

கும்பகோணம் : கும்பகோணம் சாரங்கபாணிசுவாமி திருக்கோயில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையும், தொன்மையும் வாய்ந்த வைணவத்திருத்தலம் திருமழிசையாழ்வாருக்கு பெருமாள் நேரில் காட்சி தந்துள்ளார் அவரது வேண்டுகோளின்படி உத்தானசாயி (சயனத்தில் இருந்து சற்று எழுந்திருக்கும் நிலை) கோலத்தில் ஸ்ரீ சாரங்கபாணிசுவாமி எனும் ஆராவமுதன் அருள் பாலிக்கிறார் தாயார் கோமளவள்ளி, ஹேமரிஷி தவம் செய்த தலம் அவர் பெயரால் விளங்கும் ஹேம புஷ்கரணியில் தோன்றிய மகாலட்சுமியை (கோமளவள்ளி) பெருமாள் வைகுண்டத்தில் இருந்து நேராக ரதத்துடன் இத்தலத்திற்கு எழுந்தருளி மணம் புரிந்ததாக வரலாறு பெருமாள் வைகுண்டத்தில் இருந்து நேரடியாக தன்னுடைய ரதத்திலேயே இங்கு வந்ததால், இங்கு கர்ப்பகிரகம் யானை, குதிரை பூட்டிய ரதத்துடன் கூடியதாக அமைந்துள்ளது இது பூலோக வைகுண்டம் என போற்றப்படுகிறது எனவே இங்கு சொர்கவாசல் தனியாக இல்லை பெரியாழ்வார், பேய்யாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், ஆண்டாள் ஆகிய ஏழு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதும், 108 திவ்ய தேசங்களில் திருவரங்கம் திருப்பதிக்கு அடுத்ததாக 3வது தலமாக ஸ்ரீ சாரங்கபாணித்திருக்கோயில் விளங்குகிறது இத்தகைய பெருமை பெற்ற சாரங்கபாணிசுவாமி திருக்கோயில் ஆண்டு தோறும் கோமளவள்ளி தாயாருக்காண பங்குனி பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் 15 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம் அதுபோல இவ்வாண்டு இவ்வுற்சவம் இன்று கோமளவள்ளி தாயார் சிறப்பு பட்டு வஸ்திரம் விசேஷ மலர் அலங்காரத்துடன் கொடிமரம் எதிரே எழுந்தருள, பட்டாட்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஜபித்து, சிறப்பு பூஜைகள் செய்து மங்கள வாத்தியங்கள் முழங்க, கருடாழ்வார் சின்னம் பொறிக்கப்பட்ட கொடி, கொடிமரத்தில் ஏற்றப்பட்டு தாயாருக்கும், கொடிமரத்திற்கும் மகா தீபாராதணை செய்யப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர் விழாவினை யொட்டி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் தாயார் பிரகார உலா நடைபெறுகிறது முக்கிய நிகழ்ச்சியாக பங்குனி உத்தரதினமான 18ம் தேதி வெள்ளிக்கிழமை வெள்ளிரதத்தில் தாயார் உட்பிரகார புறப்பாடும், 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாண வைபவமும் நடைபெற்று 24ம் தேதி வியாழக்கிழமை தாயார் பெருமாள் தாயார் ஏகசிம்மாசன சேவை, விடையாற்றியுடன் இவ்வாண்டிற்காண தாயார் பிரமேற்சவம் இனிதே நிறைவு பெறுகிறது.

Tags:

Comments & Conversations - 0