• முகப்பு
  • district
  • கும்பகோணம் அருகே ஆடுதுறையிலிருந்து கும்பகோணம் (வழி) வடகரை அம்மன்குடி புதிய பேருந்து வழித்தடத்தை அரசு தலைமை கொறடா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கும்பகோணம் அருகே ஆடுதுறையிலிருந்து கும்பகோணம் (வழி) வடகரை அம்மன்குடி புதிய பேருந்து வழித்தடத்தை அரசு தலைமை கொறடா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கும்பகோணம் அருகே தமிழ்நாடு முதலமைச்சர் வழிக்காட்டுதலின்படி, போக்குவரத்துத்துறை அமைச்சர் உத்தரவின்படியும் பொதுமக்களின் வசதிக்காக கும்பகோணம் நகர்1 கிளை தடம் எண். D1 நகரப்பேருந்து மூலம் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து திருலோகி (வழி)ஆடுதுறை, துகிலி காலை 6.45 மணிக்கு, மாலை 4.35 மணிக்கும் மற்றும் திருலோகியிலிருந்து கும்பகோணம் (வழி) துகிலி ஆடுதுறை காலை 7.55, மணிக்கு மாலை 5.35 மணிக்கும் இயங்கும் தொடர்ந்து கும்பகோணம் நகர்-2கிளை தடம் எண். A15 நகரப்பேருந்து மூலம் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து ஆடுதுறை (வழி) அம்மன்குடி வடகரை காலை 630, மணியளவில் 9.10, மதியம் 145, மாலை 4.20, மணிக்கும் மற்றும் ஆடுதுறையிலிருந்து கும்பகோணம் (வழி) வடகரை அம்மன்குடி காலை 7.55, மணிக்கு10.20, மாலை 3.05,5.35 மணிக்கும் இயங்கும் பேருந்தினை அம்மன்குடி பேருந்து நிலையத்திலிருந்து. மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம், அரசு தலைமை கொறடா கோவி.செழியன், கொடியசைத்து துவக்கி வைத்தனர். நிகழ்ச்சி அரசு போக்குவரத்து கழக வணிக மேலாளர் கணேசன் திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் கோ.க அண்ணாதுரை மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஜி கே எம் ராஜா திருவிடைமருதூர் ஒன்றிய துணை பெருந்தலைவர் பத்மாவதி கிருஷ்ணராஜ் அம்மன்குடி ஊராட்சி மன்றத்தலைவர் பவுன்யம்மாள் கரும்பாயிரம் ஊராட்சி செயலாளர் இளங்கோவன் மற்றும் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended