Author: THE GREAT INDIA NEWS

Category: tamilnadu

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்திற்குட்பட்ட கானூர் கிராமத்தில் மணிமாறன் என்கிற விவசாயி சுமார் 5 ஏக்கர் நிலத்தில் கொய்யா பழம் விவசாயம் செய்து வரும் நிலையில் , ஒரு ஏக்கரில் சுமார் ஐந்தாயிரம் செலவு செய்து மூன்று விதமான கொய்யா பழங்கள் பயிர்செய்து வருகின்ற நிலையில் தைவான் ஏற்காடு செடிகள் லக்னோ 49 பண்ருட்டி ரக பழங்களும் பயிர் செய்து வருகின்றனர். இந்நிலையில் வருடத்திற்கு இரண்டு முறை கொய்யாப்பழம் பறிக்கப்படும் இதில் ஒரு கிலோ கொய்யாவின் விலை 20 ரூபாய் மட்டுமே மழைக்காலங்களில் கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது . இதனால் விவசாயிகளுக்கு எதிர்பார்த்த லாபம் ஏதும் கிடைக்கவில்லை எங்களிடம் பத்து ரூபாய்க்கு வாங்கும் மொத்த வியாபாரிகள் சென்னை பெங்களூர் ஆகிய நகரப்பகுதிகளில் 60 முதல் 150 வரை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் மூன்று நாட்களில் அறுவடை செய்துவிட வேண்டும் இல்லையென்றால் பழங்கள் அனைத்தும் நிலத்திலேயே உதிர்ந்து போகும் இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு வருகின்றன. இதனால் தமிழக அரசு விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார். ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம்

Tags:

#cuddalorenews #cuddalorenewstoday #cuddalorenewstodaylive #formers #agriculture #vivasayam #srimushnamnews #srimushnamlatestnews #srimushnamtodaynews #cuddalorenewsyesterday #cuddalorenewsintamil #cuddalorenewspapertoday #இன்றையசெய்திகள்கடலூர் #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #indrayaseithigalcuddalore #todaynewscuddaloretamilnadu #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #aanmegamnews #todaystamilnadunews #indiabusinesstoday #neyvelinewstoday #peoplestruggle
Comments & Conversations - 0