• முகப்பு
  • district
  • ஸ்ரீமுஷ்ணம் அருகே கூடலையாற்றூர் கிராமம் அரசினர் நடுநிலைப் பள்ளி முன்னாள் மாணவர் 10 கம்ப்யூட்டர்களை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கினார்.

ஸ்ரீமுஷ்ணம் அருகே கூடலையாற்றூர் கிராமம் அரசினர் நடுநிலைப் பள்ளி முன்னாள் மாணவர் 10 கம்ப்யூட்டர்களை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கினார்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்திற்குட்பட்ட கூடலையாற்றூர் கிராமத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அரசினர் நடுநிலைப்பள்ளி நடைபெற்று வருகிறது . இந்நிலையில் 1984 ஆண்டு பள்ளியில் பயின்ற கிரேன் குமார் என்ற மாணவர் தற்போது பெங்களூரில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தங்கள் கிராமத்தில் மாணவர்களுக்கு போதிய வசதியில்லாததால் இன்று ஊராட்சி மன்ற தலைவர்ஜீவா ஆசைத்தம்பி ஊராட்சி செயலர் தியாகராஜன் மற்றும் துணை வட்டாட்சியர் சபரி முத்து பள்ளி தலைமை ஆசிரியர் இருதயராஜ் ஆகியோர் முன்னிலையில் சுமார் ஒரு லட்சம் செலவில் 10 கம்ப்யூட்டர்களை வழங்கினார். அதோடு நான் சிறுவயதாக இருக்கும் போது பள்ளிக்கூடத்தில் இது போன்ற வசதிகள் இல்லை இதனால் நான் பட்ட கஷ்டங்களை எனது கிராமத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காகவும் அறிவு யூகிக்கும் வகையில் இந்த கம்ப்யூட்டர்களை எனது பள்ளிக்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டதாக கூறினார்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended