• முகப்பு
  • tamilnadu
  • தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள் !

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள் !

TGI

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தகவல் அறியும் உரிமைசட்டம் வந்து பதினாறு ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த சட்டத்தின் அடிப்படையான “தகவல்“ என்பதற்கான பொருள்விளக்கம் பிரிவு 2 (f) - ல் தெளிவாக கொடுக்கப் பட்டிருந்தும், அதைபடித்து புரியாத, அல்லது புரியாதது போலநடிக்கும் சில பொதுதகவல் அலுவலர்களுக்கு “தகவல் என்றால் என்ன?” என்று பாடம் எடுக்கும் நிலை தான் இன்றும் தொடர்கின்றது. தகவல் மறுப்பதற்காக பொதுத்தகவல் அலுவலர்களுக்கு, இந்த சட்டத்தில் அதிகபட்சம் தெரிந்த பிரிவுகள் 2 (f) மற்றும் 8 (1) (j), அதாவது கோருபவை தகவல் எனும்பதத்தில் வராது அல்லது தனிப் பட்ட நபர் தகவல் என்பதாகும். இவர்கள் ஒவ்வொரு முறையும் இவ்வாறான முறை அற்ற வகையில் தகவலை மறுக்கும் போது, தபால் செலவினங்களாக மக்கள் வரிப் பணத்தை விரயம் செய்கின்றார்கள் என்பதை அவர்கள் சிறிதளவு கூட உணருவதில்லை. ஆவணங்களை கோரும் போது, அதற்கான பதிலை முப்பது நாட்கள் கழித்து வழங்குவதால், அந்த ஆவணங்களை இலவசமாக வழங்க நேரிடுகின்றபோது, அரசிற்கு பக்கத்திற்கு ரூபாய் 2 வீதம் வருவாய் இழப்பு ஏற்படுகின்றது. இவ்வாறு வருடத்தில் பல இலட்சம்மக்கள் வரிப்பணம் பொதுதகவல் அலுவலர்களால் வீணாகின்றது. தகவலறியும் உரிமைசட்டத்தில் செலவழிக்கப் படும் பணம் ( தபால் செலவினங்கள் மற்றும் ஆவணங்களை நகல் எடுக்கும் செலவினங்கள்) இதை அரசாங்கம் முறையாக தணிக்கை செய்கின்றதா என்பதும் தெரியவில்லை. ஆனால், நமது பணம் இவ்வாறுவீணாவதை நாம் அனுமதிக்கலாமா? இனி வரும் காலங்களில், யாரகிலும் பொதுத்தகவல் அலுவலரானவர் கோரிய தகவல் பிரிவு 2 (f)-ல் வராது என்றோ, தேவை அற்ற வகையில் தனி நபர் தகவல் என்று கூறி தகவலை மறுத்தாலோ, முழுத்தகவலை வழங்கவில்லை என்றாலோ, கோரிய ஆவணங்களை முப்பது நாட்களுக்கு வழங்க மறுத்தாலோ, தகவலை கோரி மேல்முறையீடு செய்வது ஒரு பக்கம் இருந்தாலும், உடனே தகவல் ஆணையத்திற்கு பிரிவு 18 (1) (b) (e) - ன் படி புகார் செய்யுங்கள். அதில் பொதுத்தகவல் அலுவலர்மீது பிரிவு 20 (1) மற்றும் 20 (2) - ன் படி தண்டனை வழங்க கோரிக்கை வையுங்கள். இவ்வாறான தொடர் புகார்கள் மட்டுமே, பொதுத்தகவல் அலுவலர்களை இந்த சட்டத்தை முறையாக பொது மக்களின் நலனுக்காக அமல் படுத்த வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தும். தகவல் அறியும் உரிமைசட்டம் பிரிவு 18 (1) - ன் கீழ் புகார் மனுவின் மாதிரி படிவம்! 1) முதல்பாராவை தேவைக் கேற்ப கீழ்கண்டவாறு மாற்றிக் கொள்ளுங்கள். (கோரிய தகவல்கள் தனிப் பட்ட நபரின் தகவல்கள் என்று எனக்கு தகவலை வழங்க மறுக்கின்றார்) (பொதுத்தகவல் அலுவலரானவர் எனது மனுவை வாங்காமல் திருப்பி அனுப்பி விட்டார்) (பொதுத்தகவல் அலுவலரானவர் எனது மனுவிற்கு முப்பது நாட்கள் கடந்தும் பதில் அளிக்கவில்லை) (பொதுத்தகவல் அலுவலரானவர் நான் கோரிய தகவலுக்கு, ஆவணங்களுக்கு நியாயமான கட்டணத்தைவிட அதிகமானதொகை கோருகின்றார்) (பொதுத்தகவல் அலுவலரானவர் பொய்யான, உண்மைக்கு புறம்பான தகவலை அளித்து உள்ளார்) (பொதுத்தகவல் அலுவலரின் அலுவலகத்தில் ஆய்வுசெய்ய சென்றால், ஆய்வு செய்வதற்கான அனுமதியை தர மறுக்கின்றார்) 2. கோரிய தகவல்கள் பிரிவு 4 (1) (b) - ல் அடங்கும் தகவல்களா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். அந்தபிரிவில் அடங்காத தகவல்கள் என்றால், மேற்கூறிய மாதிரி படிவத்தில் பாரா 2 - யை நீக்கிவிடவும். என்னை பொறுத்த வரையில் கோரும் தகவல்கள் ஏதாவது ஒரு வகையில் மேற்படி பிரிவில் அடங்கும். அல்லது, அவ்வாறு அடங்கும் வகையில் உங்கள் தகவலை கோர முயற்சியுங்கள். 3. இந்தப்புகார் மனுவில் எந்த இடத்திலும் கோரிய தகவலை வழங்கவோ, அல்லது தகவல் வழங்காதற்கு இழப்பீடோ கோரக் கூடாது. அவ்வாறு கோரினால், புகாரை பெற்றுக் கொண்ட தகவல ஆணையமானது, முதல் முறையீடு இன்றி இரண்டாம்முறையீடானது தகவல் ஆணையத்திற்கு தகவல் கோரி நேரடியாக புகாராகமனு செய்யப் பட்டுள்ளது என்று காரணம் காட்டி, புகார் மனுவானது நிரகாரிக்கப் படலாம். நினைவில் கொள்ளுங்கள், தகவல் மற்றும் இழப்பீடு கோரினால், முதல் மேல் முறையீட்டினை முடித்து விட்டு, பின்னர் பிரிவு 19 (3) - ன் கீழ் இரண்டாம் மேல் முறையீடு தான் செய்ய வேண்டும். 4. புகார் என்பது மேல்முறையீடு அல்ல. அது பொதுத்தகவல் அலுவலர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு ஆகும். ஆகவே, புகார் செய்வதற்கு போதுமான முகாந்தரம் இருக்கின்றதா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். தண்டனை பிரிவுகள் 20 (1) மற்றும் பிரிவு 20 (2) ஆகியவைகள், பிரிவு 18 (1) மற்றும் 19 (3) ஆகியவைகளுக்கு பொருந்தும். 5. உதாரணமாக மனுதாரர் ஒரு அலுவலகத்தில் பணிபுரிபவர்களின் விபரங்களை கேட்கின்றார். இதை பொதுத்தகவல் அலுவலரானவர் தனிப் பட்ட நபர்தகவல் என்று மறுத்தால் தாரளமாக புகார் செய்யலாம். ஏனெனில் பிரிவு 4 (1) (b)(ix) - ன்படி அந்த அலுவலகம் தானகவே முன் வந்து அவர்களது இணையதளத்திலும் நோட்டிஸ் போர்டிலும் வெளியிடப் படவேண்டி தகவல்கள் ஆகும். தானாக வெளியிடப் படவேண்டியதை, மனுதாரருக்கு வழங்க மறுக்கின்றார் என்றால் அதற்காக புகார் செய்யலாம். 6. சட்டத்தின் விதிகளின் படி முப்பது நாட்களுக்குள் பொதுத்தகவல் அலுவலரானவர் தகவலை வழங்க வேண்டும். அதற்காக முப்பத்து ஓராவது வதுநாள் புகார் செய்யாமல், நாற்பது நாட்கள் வரை காத்திருந்து புகார் செய்யலாம். 7. பொதுத்தகவல் அலுவலர், மனுதாரரின் மனுவை திருப்பி அனுப்பி விட்டாலோ, ஆவணங்கள் வழங்க நியாமற்ற கட்டணத்தை கோரினாலோ மற்றும் பொய்யான தகவல்கள் வழங்கப் பட்டாலோ, உடனே புகார் செய்யலாம். 8.புகாரின் நகலை பொதுத்தகவல் அலுவலருக்கு கட்டாயம் அனுப்புங்கள். 9. புகாரை தொடர்ந்து, தகவல்கோரி முதல்மேல் முறையீட்டினை வழக்கம் போல தனியாக செய்யுங்கள். தகவல் அறியும் உரிமை சட்டம் – புகார் அளிக்கும் பிரிவு 18 (1) – ஒரு அலசல் தகவல் அறியும் உரிமை சட்டம் பிரிவு 18 (1) - ன் கீழ் தகவல் வழங்கப்படவில்லை என ஒருவர் தகவல் ஆணையத்திடம் புகார் கொடுக்கும் போது, அந்த புகாரின்பேரில் தகவல் ஆணையர் மனுதாரருக்கு தகவல்வழங்க ஆணையிடலாமா? என்ற கேள்விக்கு இந்த உச்ச நீதி மன்ற நீதிப்பேராணை (Chief Information Commr.& Anr vs State Of Manipur & Another ( MANU / SC / 1484 / 2011 ) விடை அளிக்கின்றது. இந்த பிரச்சனையில், மனுதாரருக்கு தகவல் கிடைக்கவில்லை என பிரிவு 18(1)-ன் கீழ் தகவல் ஆணையத்திடம் புகார் செய்கின்றார். அந்த புகாரை விசாரித்த தகவல் ஆணையர், மனுதாரருக்கு 15 நாட்களுக்குள் தகவல் வழங்க வேண்டும் என்று பொது தகவல் அலுவலருக்கு ஆணையிடுகின்றார். இந்த ஆணையை எதிர்த்து மனுதாரரின் வழக்கு உச்சநீதிமன்றம் வரை செல்கின்றது. அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கீழ்கண்டவாறு எடுத்துரைக்கின்றது. 31. கூறப்பட்ட வாதத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் தடைசெய்யப்பட்ட தீர்ப்பில் எந்த பிழையும் காணவில்லை, இதன் மூலம் ஆணையர் கூறப்பட்ட சட்டத்தின் 18 வது பிரிவின் கீழ் ஒரு புகாரை ஏற்கும் போது, ​​அணுகலுக்கான உத்தரவை வழங்குவதற்கான அதிகாரம் இல்லை. தகவலுக்கு." "37. சட்டத்தின் 18 மற்றும் 19 பிரிவுகள் இரண்டு வெவ்வேறு நோக்கங்களுக்காக சேவை செய்கின்றன மற்றும் இரண்டு வெவ்வேறு நடைமுறைகளை வகுத்து, அவை இரண்டு வெவ்வேறு தீர்வுகளை வழங்குகின்றன. ஒன்று மற்றொன்றுக்கு மாற்றாக இருக்க முடியாது. 42. அதுமட்டுமின்றி சட்டத்தின் 19வது பிரிவின் கீழ் உள்ள நடைமுறை, பிரிவு 18 உடன் ஒப்பிடும் போது, ​​அவர் கோரிய தகவல் மறுக்கப்பட்ட நபரின் நலனைப் பாதுகாப்பதற்கான பல பாதுகாப்புகளைக் கொண்டுள்ளது. இது தொடர்பாக பிரிவு 19 (5), குறிப்பிடப்படலாம். பிரிவு 19 (5) தகவல் அதிகாரியின் கோரிக்கையின் மறுப்பை நியாயப்படுத்தும் பொறுப்பை வைக்கிறது. எனவே, மறுப்பை நியாயப்படுத்துவது அதிகாரிக்குத்தான். பிரிவு 18 இல் அத்தகைய பாதுகாப்பு எதுவும் இல்லை. அது மட்டுமின்றி பிரிவு 19 ன் கீழ் உள்ள செயல் முறையானது காலவரையறையானது ஆனால் பிரிவு 18 ன் கீழ் எந்த வரம்பும் விதிக்கப்படவில்லை. எனவே இரண்டு நடைமுறைகளில், பிரிவு 18 மற்றும் பிரிவு 19 க்கு இடையில், பிரிவு 19 ன் கீழ் ஒன்று தகவலுக்கான அணுகல் மறுக்கப் பட்ட நபருக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். பிரிவுகள் 18 மற்றும் 19, வெவ்வேறு நோக்கம் கொண்டவைகள். இரண்டும் வெவ்வேறு வகையான பரிகாரங்களை வழங்கு கின்றது. ஆகவே, தகவல் கிடைக்கவில்லை என மனுதாரர் பிரிவு 18 (1)-ன் கீழ் தகவல் ஆணையத்திடம் புகார் அளித்தால், கோரிய தகவலை வழங்க ஆணையிட அந்தபிரிவின் படி தகவல் ஆணையருக்கு அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் ஆணையிடுகின்றது. மேற்படி உச்ச நீதி மன்ற நீதிப் பேராணையின் அடிப்படையில், Dr. Deepak Juneja vs. Central Information Commission..... on 29 April, 2019 என்ற நீதிப் பேராணையில், டெல்லி உயர் நீதி மன்றமானது கீழ்கண்டவாறு குறிப்பிடுகின்றது 14. ஜூலை 29, 2010 தேதியிட்ட உத்தரவின் மூலம் இந்த ரிட்மேல்முறையீடு தள்ளுபடி செய்யப் பட்டது, அதில் சட்டத்தின் 18 ஆவது பிரிவின் கீழ் ஆணையருக்கு தகவல்களை அளிக்கும்படி ஆணையாளருக்கு அதிகாரம் இல்லை என்று தீர்ப்பளித்தது. சட்டத்தின் பிரிவு 19(8) இன் கீழ் ஒரு அதிகாரம் ஏற்கனவே பிரிவு 19 ன் கீழ் ஒரு பயிற்சியின் அடிப்படையில் வழங்கப் பட்டுள்ளது. ஆகவே பிரிவு 18(1)-ன் கீழ் மனுதாரர் கீழ்கண்ட காரணங்களுக்காக புகாரளித்தால், 1) பொதுத்தகவல் அலுவலர?

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended