• முகப்பு
  • அரசியல்
  • ஐம்பது கோடி மதிப்பிலான பூங்கா அரசு போக்குவரத்துக் கழக பணிமனை வாகனங்கள் பார்க்கும் இடம் உள்ளிட்ட திட்டங்களை kn.நேரு துவக்கி வைக்க உள்ளார்.

ஐம்பது கோடி மதிப்பிலான பூங்கா அரசு போக்குவரத்துக் கழக பணிமனை வாகனங்கள் பார்க்கும் இடம் உள்ளிட்ட திட்டங்களை kn.நேரு துவக்கி வைக்க உள்ளார்.

மாரிமுத்து

UPDATED: May 23, 2023, 1:29:44 PM

தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் தூத்துக்குடி மாநகர பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இந்த பணியில் எல்லாம் விரைவாக முடிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேரு மேற்பார்வையில் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் பல பணிகள் முடிவுற்று மக்களின் பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது இதனை அடுத்து முடிவுற்ற பணிகளை துவக்கி வைக்க மாநகராட்சி நிர்வாகம் அதற்கான பணிகளை மேற்கொண்டது.

அதன்படி தூத்துக்குடி மாநகராட்சியில் சுமார் ஏழு ஏக்கர் பரப்பளவில் 12 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள டோபி கானா அதுபோல புதிய பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை சுமார் 10 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜெயராஜ் ரோட்டில் நவீன வசதிகளுடன் 10 புள்ளி 24 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கார் பார்க்கிங் அதுபோல சுமார் 10 கோடிக்கு மேல் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள ஆறு பூங்கா உள்ளிட்டவைகளை வருகிற 26 ஆம் தேதி நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு கலந்து கொண்டு திறந்து வைக்க உள்ளார்.

விழா புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கேடிசி டிப்போவில் நடைபெறுகிறது.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, ஊர்வசி செல்வராஜ், மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில் ராஜ் கலந்து கொள்கின்றனர்.

மேலும் நகராட்சி நிர்வாக ஆணையர் பொன்னையா நகராட்சி நிர்வாக செயலர் சிவதாஸ் மீனா ஆகியோர் கலந்து கொள்கின்றனர், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விழாவை காண ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

மக்களின் பயன்பாட்டிற்கு மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முடிக்கப்பட்டுள்ள சுமார் 50 கோடி மதிப்பிலான திட்டங்களை அமைச்சர் கே என் நேரு துவக்கி வைக்க உள்ளார், அமைச்சர் கே என் நேரு துவக்கி வைத்த உடன் மக்களின் பயன்பாட்டிற்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் என்று தெரிய வருகிறது.

ஜெயராஜ் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள கார் பார்க்கிங் திறக்கப்படுவதால் அப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் நிரந்தர தீர்வு காணப்படும் என்று தெரிய வருகிறது.

VIDEOS

RELATED NEWS

Recommended