• முகப்பு
  • கல்வி
  • 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவில் பரமக்குடி நகரில் கே ஜே கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி முதலிடம்.

12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவில் பரமக்குடி நகரில் கே ஜே கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி முதலிடம்.

மாமுஜெயக்குமார்

UPDATED: May 11, 2023, 12:43:20 PM

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானதில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகரில் கே ஜே கீழ முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி 99 சதவீதம் தேர்ச்சி பெற்று நகரில் முதலிடத்தை பெற்றது. 

பள்ளியில் பயின்ற தீபிகா முதலிடத்தையும், சபிதா இரண்டாம் இடத்தையும், கோபிகா மூன்றாம் இடத்தையும் பெற்றனர். மேலும் விலங்கியல் பாடத்தில் தீபிகா மாணவி 100/100 மதிப்பெண்ணும் கணக்கியல் பாடத்தில் மாணவி கோபிகா 100/100 மதிப்பெண் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தனர்.

இவர்களுக்கு பள்ளியின் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது விழாவிற்கு தாளாளர் ஷாஜகான் தலைமை தாங்கினார். கீழ முஸ்லிம் ஜமாத் சபை தலைவர் சாகுல் ஹமீது செயலர் சாதிக் அலி, பொருளாளர் வியக்கத் அலி, கல்விக்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகுத்தனர்.   

பள்ளியின் தலைமை ஆசிரியர் முனைவர் அஜ்மல்கான் அனைவரையும் வரவேற்றார்.  

விழாவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர் - மாணவிகளுக்கு சிறப்பு பரிசும்,100/100 பெற்ற மதிப்பெண் பெற்ற மாணவியர்களுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டன. பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் புரோஸ் கான் நன்றி கூறினார்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended