Author: JK 

Category: மாவட்டச் செய்தி

திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 55ஆவது நாளாக மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு நூதன தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீர் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி காவிரி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் கடந்த இரண்டு நாளுக்கு முன்பாக ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று கர்நாடகாவில் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுப்பதை கண்டித்து அங்குள்ள பல்வேறு அமைப்புகள் கடையடைப்பு போராட்டம் நடத்துகிறது.

மேலும் சிலர் தமிழக முதல்வர் ஸ்டாலின் படத்தை வைத்து மாலை போட்டு அதற்கு கருமாதி செய்வதாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் கர்நாடக முதல்வர் சீதாராமையா படத்தை வைத்து மாலை அணிவித்து, சாம்பிராணி போட்டு தவசம் செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் உடனடியாக கர்நாடகா அரசு தமிழகத்தில் உச்ச நீதிமன்ற உத்திரவுப்படி தண்ணீர் வழங்க வேண்டும் எனவும் கோஷமிட்டனர்.

Tags:

#trichynewstoday , #trichynewstamil , #farmers #karnatakachiefminister #trichynewspapertoday , #trichynewslivetoday , #trichynews , #cauveryissue #siddharamaiaha #இன்றையசெய்திகள்திருச்சி , #இன்றையசெய்திகள்திருச்சிதமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடுமாவட்டங்கள் , #indrayaseithigaltrichy , #todaynewstrichy , #todaynewstamilnadu , #todaytamilnadunews , #indrayaseithigaltrichytamilnùadu , #indrayaseithigaltamilnadumavattangal , #TheGreatIndiaNews , #Tginews , #news , #மணப்பாறை , #manapparailatestnews , #manapparaitodaynews , #manapparainews
Comments & Conversations - 0