• முகப்பு
  • காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் - ஏலவார்குழலி திருக்கல்யாணம் கோலாகலமாக  விடியற்காலை  நடந்தது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் - ஏலவார்குழலி திருக்கல்யாணம் கோலாகலமாக  விடியற்காலை  நடந்தது.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

காஞ்சிபுரம் : ஏகாம்பரநாதர் கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவம், கடந்த 7ம் தேதி துவங்கியது. சிறப்பு திருமஞ்சனம் இந்த பிரம்மோற்சவத்தின் முக்கிய திருவிழாவான வெள்ளி தேர், திருத்தேர் திருவிழா, வெள்ளி மாவடி சேவை ஆகியவை சிறப்பாக நடந்தது. பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான இன்று காலை திருக்கல்யாணம் உற்சவம் வெகு சிறப்பாக நடந்தது.  ஏகாம்பரநாதருடன் ஊடல் கொண்டு, நேற்று  காலை ஏலவார்குழலி அம்மன், ஒக்கப்பிறந்தான் குளம் அருகில் உள்ள, மண்டபத்திற்கு சென்று விடுகிறார். அவரை அழைப்பதற்காக, காமாட்சி அம்மன், ஆதி காளிகாம்பாள், கன்னியம்மன் ஆகிய மூன்று அம்பாள்களும், நேற்று  இரவு அங்கு எழுந்தருளினர். அவர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. பின்னர், ஏலவார்குழலியை, தோழிகளான மற்ற மூன்று அம்பாளும், ஏகாம்பரநாதர் கோவில் ராஜகோபுரம் எதிரில் உள்ள, 16 கால் மண்டபத்திற்கு நேற்று  இரவு அழைத்து வந்தனர்.  பின் ஏலவார்குழலி அம்மனை கம்பா நதிக்கு நீராட அனுப்பிவிட்டு, அவரவர் சன்னிதிக்கு திரும்பினர். நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை ஏலவார்குழலி அம்மன் கம்பா நதியில் மணலால் லிங்கம் அமைத்து, பூஜித்த தல வரலாற்று நிகழ்ச்சி நடந்தது.  அதன் பின் ஏகாம்பரநாதர், ஏலவார்குழலிக்கு அங்கு மாலை மாற்றப்பட்டு, ஆயிரம்கால் மண்டபத்தின் மீது, திருக்கல்யாணம் நடக்கும் இடத்தில் எழுந்தருளினர். அதிகாலையில் மேளதாளத்துடன் வெடி வேண்டுங்கள் முழங்க  வெகு விமர்சையாக  திருக்கல்யாணம் நடந்தது.  அதை தொடர்ந்து, திருமண கோலத்தில் தங்க இடப வாகனத்தில் ஏகாம்பரநாதரும் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், ஏலவார்குழலி அம்மனும் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளிலும் திருவீதிவுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருமண வைபவத்தில் சில தம்பதிகள் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான பக்த கோடிகள் வழி நெடுகிலும் நின்றிருந்து சுவாமிகளுக்கு தீபமேற்றி வணங்கி வழிபட்டனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended