• முகப்பு
  • aanmegam
  • காஞ்சிபுரம் தேவராஜபெருமாள் கருடவாகனத்தில் வீதியுலா சென்று பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

காஞ்சிபுரம் தேவராஜபெருமாள் கருடவாகனத்தில் வீதியுலா சென்று பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயிலில் சித்திரை பிரமோற்சவ விழா கடந்த 13ம் தேதி கெடியேற்றத்துடன் கோலாகோலமாக தொடங்கியது. தினமும் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தினர். முக்கிய நிகழ்வான கருடசேவை இன்று விடியற்காலை காலை வெகு விமர்சையாக நடந்தது. இதையொட்டி நவரத்தினம் தங்கம் வெள்ளி போன்ற ஆபரணங்கள் அணியப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் பெருமாள் அமர வைக்கப்பட்டார். கோபுர வாசல் பகுதிக்கு வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இதை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். பின்னர் கோவிந்தா கோவிந்தா என்ற பக்தர்கள் கோஷமிட கருட வாகன ஊர்வலம் நடந்தது. செட்டி தெரு, டிகே நம்பி தெரு, ரங்கசாமி குளம், பிள்ளையார்பாளையம் உள்ளிட்ட பல வீதிகள் வழியாக பெருமாள் ஊர்வலமாக சென்றார். வழி நெடுகளிலும் கருட வாகனத்துக்கு மக்கள், தேங்காய் உடைத்து வழிபட்டனர். வழியெங்கும் பக்தர்களுக்கு அன்னதானம், நீர், மோர், குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. பெருமாளை தரிசிக்க தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். வரதராஜ பெருமாள் கோயில் கருட சேவை முன்னிட்டு, பாதுகாப்பு பணியில் திருவள்ளுர் , திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 300 காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் விதத்தில் துணிகளுடன் தங்க செயின்னை இணைத்து மாட்டிக் கொள்ள ஊக்குகள் விநியோகிக்கப்பட்டு பக்தர்களுக்கு அறிவுறை வழங்கப்பட்டது. கருடசேவையை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended