• முகப்பு
  • district
  • காமராஜர் பிறந்த நாள் மற்றும் தொல்காப்பியனார் நினைவு நாள் பொதுக்கூட்டம் - VCK

காமராஜர் பிறந்த நாள் மற்றும் தொல்காப்பியனார் நினைவு நாள் பொதுக்கூட்டம் - VCK

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வீரசோழபுரம் ஊராட்சியில் முன்னாள் முதலமைச்சர் கல்வி தந்தை காமராஜர் பிறந்த நாள் மற்றும் தியாக தந்தை தொல்காப்பியனார் நினைவு நாள் பொதுக்கூட்டம் விடுதலை கட்சி சார்பில் காமராஜர் திடலில் தலைமை நிலைய பொறுப்பாளரும் கள்ளக்குறிச்சி 15 வது வார்டு ஒன்றிய கவுன்சிலருமான வழக்கறிஞர் தாமரைவண்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கிளை செயலாளர் ஆறுமுகம் வரவேற்புரை ஆற்றினார், கூட்டத்தில் முதன்மை செயலாளர் , உஞ்சைஅரசன் மற்றும் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளரும் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினருமான பொறியாளர் எஸ்.எஸ்.பாலாஜி,மாவட்ட செயலாளர் தமிழ்மாறன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள் இந்நிகழ்ச்சியில் இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் மாநில செயலாளர் அப்துல் ரகுமான், மாவட்ட மேலிட பொறுப்பாளர் மோகன்,மாநில துணை செயலாளர் செங்கம் அதியமான்,மாவட்டத் துணைச் செயலாளர் சேந்தநாடு அறிவுக்கரசு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் இளையராஜா,ஒன்றிய பொருளாளர் கணேசன்,ஊராட்சி மன்ற தலைவர் தனசேகரன்,துணை தலைவர் முருகவேல்திமுக ஒன்றிய பொருளாளர் மாடூர் கணேசன் உள்ளிட்ட மாநில,மாவட்ட,ஒன்றிய,கிளை நிர்வாகிகளும் 500 க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். பொதுக்கூட்டத்தில் காமராசர் மற்றும் தொல்காப்பியனார் பற்றிய பேச்சு போட்டியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ , மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் 250க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்களும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் ஆதி.சுரேஷ்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended