• முகப்பு
  • district
  • உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு ரதம் மற்றும் கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்.

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு ரதம் மற்றும் கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக மக்கள் தொகை தினத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மக்கள் தொகை விழிப்புணர்வு ரதம் மற்றும் கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்தவிழிப்புணர்வு பேரணியில் கல்லூரி மாணவர்கள் மக்கள்தொகையை கட்டுப்படுத்தும் வகையில் முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் 3 ஆண்டுகள் இடைவெளி தேவை,பெண்களுக்கு 21 வயதிற்கு பிறகு திருமணம் செய்ய வேண்டும். மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் பெண்களுக்கு உயர் கல்வி அளிக்க வேண்டும்,இளம் வயது திருமணத்தை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியவாறு கல்லூரி மாணவர்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். இதற்கு முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் ஆதி. சுரேஷ்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended