Author: THE GREAT INDIA NEWS

Category: pondichery

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் புதுவை தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மாநிலங்களில் இருந்து ஏழை எளிய மக்கள் மருத்துவம் பார்த்து செல்கின்றனர். இன்று திங்கட்கிழமை என்பதால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும் மேலும் மாதந்தோறும் மருந்து மாத்திரைகள் வாங்க வரும் நோயாளிகளும் இன்று காலை அதிக அளவில் ஜிப்மர் வந்திருந்தனர். புத்தபூர்ணிமாவை முன்னிட்டு மருத்துவமனைக்கு விடுமுறை என்பதால் யாரும் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று தெரிவித்து அனைத்து பொதுமக்களையும் திருப்பி அனுப்பி வைத்தனர். இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மருத்துவம் பார்க்க வந்த ஏழை எளிய மக்கள் வேறு வழியின்றி திரும்பி சென்றனர். இதுகுறித்த பொதுமக்கள் கூறும்போது அறிவிப்பின்றி மருத்துவமனை விடுமுறை என்று மருத்துவம் பார்க்க வந்தவர்களை திருப்பி அனுப்புவது இதுவே முதல் முறை என்றும் மாதாந்திர மாத்திரை வாங்க வெளிமாவட்டங்களில் இருந்து வருகிறோம் . ஆனால் நோயாளி மீது அக்கறை காட்டாமல் நிர்வாகம் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

Tags:

#இன்றையசெய்திகள்புதுச்சேரி #இன்றையமுக்கியசெய்திகள்புதுச்சேரி #இன்றையசெய்திகள்புதுச்சேரி #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #Tamilnadulatestnews #breakingnewstamil #Todaysnewstamil #Tamillatestnews #Tamilnewslatest #Tamilnewspaper #onlinetamilnews #tamilnews #tamilnewsportal #onlinetamilnewsportal #pondicherynewstodaytamil #puducheryflashnewstamil #jipmerhospitalleave #jipmerhospital
Comments & Conversations - 0