காஞ்சிபுரம் பாரதிதாசன் மெட்ரிக் பள்ளியில் 'ஜில் ஜில்' கேளிக்கை பொருட்காட்சி தொடங்கியது !

வாசுதேவன்

UPDATED: May 7, 2023, 1:41:46 PM

காஞ்சிபுரம் பாரதிதாசன் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் 'சம்மர் ஜாலி செம ஜாலி' என, கோடை விடுமுறை மாணவர்களுக்காக மூன்று கேளிக்கை பொருட்காட்சி தொடங்கியது.

காஞ்சிபுரம் ஓரிக்கையில் பாரதிதாசன் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் மாணவர்கள் கோடை விடுமுறையை கொண்டாடும் வகையில் 'சம்மர் ஜாலி செம ஜாலி' கேளிக்கை பொருட்காட்சி நேற்று முன்தினம் தொடங்கியது. பொருட் காட்சியை திரைப்பட இயக்குனர் மோகன் ஜி, காஞ்சிபுரம் அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பள்ளி தாளாளர் அருண்குமார், பள்ளி மேலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி வளாகத்தில் ராசஷ ரங்கராட்டிணம், படகு, குட்டி ரயில் உள்ளிட்ட ஏராளமான விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தினமும் பிற்பகல் 3 மணிக்கு துவங்கி இரவு 10 மணி வரை கேளிக்கை பொருட் காட்சி நடந்து வருகிறது. மாணவர்கள், பெற்றோர், பொது மக்கள் என, அனைவரும் கண்டுகளித்து வருகின்றனர். 

பொருட் காட்சியில் பழவகைகள், தின்பண்டங்கள் வைக்கப்பட்டுள்ளன. இப்பள்ளியில் உள்ள வகுப்பறைகள், நூலகம், கலையரங்கம், விடுதி, ஆய்வகங்கள், உடற்பயிற்சி கூடம் உள்ளிட்டவை எப்படி அமைக்கப்பட்டுள்ளன என்று பெற்றோர்கள், பொது மக்கள் பார்வையிடும் வகையில் பள்ளி நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தன. 

தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த பொருட்காட்சியை கண்டுகளித்து செல்கின்றனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended