• முகப்பு
  • குற்றம்
  • ஜேடர்பாளையம் இளம் பெண் கொலை விவகாரம்.வடகரையாத்தூர் அருகே இன்று காலை 200 வாழை மரங்கள் வெட்டி சாய்ப்பு.

ஜேடர்பாளையம் இளம் பெண் கொலை விவகாரம்.வடகரையாத்தூர் அருகே இன்று காலை 200 வாழை மரங்கள் வெட்டி சாய்ப்பு.

முத்தையா

UPDATED: May 18, 2023, 12:32:08 PM

மக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே வடகரையாத்தூர் அருகே புதுப்பாளையத்தில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான வாழை தோட்டத்தில் மர்ம நபர்கள் இன்று அதிகாலை புகுந்து ரூ.5 இலட்சம் மதிப்புள்ள 200 வாழை மரங்களை வெட்டி சாய்த்து விட்டு தப்பி உள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன், ஏ.டி.எஸ்.பி ராஜூ, உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாழை மரங்களை வெட்டி சாய்த்து விட்டு தப்பி ஓடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு  ஜேடர்பாளையம் வடகரையாத்தூர் கிராமத்தில் ஆடு மேய்க்க சென்ற  இளம் பெண் நித்தியா (வயது 28) வை யாரோ சில மர்ம நபர்கள் மானபங்கப்படுத்தி படுகொலை செய்தனர்.

இது சம்மந்தமாக நித்யாவின் உறவினர்களும் ஊர் மக்களும் நித்யாவின் உடல் வைக்கப்பட்டிருந்த நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து போராட்டம் நடத்தி சாலை மறியல், ஆர்ப்பாட்டம் நடத்திய போது,

இந்த கொலைக்கு காரணம் அங்குள்ள கரும்பு சர்க்கரை வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகையில் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்கள் தான் காரணம் என்று கூறினார்கள்.

இதனிடையில் கரும்பு ஆலைகளில் தீவைப்பு, போன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து வந்த நிலையில் இன்று அதி காலை வாழை மரங்கள் வெட்டி சாய்ப்பு உள்ளிட்ட சம்பவங்களால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டு வருகிறது.

இதனடையில் கரும்பு வெல்லம் சர்க்கரை தயாரிக்கும் ஆலையில் உரிமையாளர் முத்துசாமியின் ஆலக்கொட்டகையில் பணியாற்றி வரும் வட மாநில தொழிலாளர்கள் நான்கு பேர் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவர்கள் மீது மர்ம நபர்கள் மண்ணெண்ணெய் குண்டு வீசி தீ பற்ற வைத்த காரணமாக வட இந்தியர் ஒருவர் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பலன் அளிக்காமல் இறந்தார்.

இதனடையில் இன்று 18.05.2023 அதிகாலை கரும்பு சர்க்கரை ஆலை சர்க்கரை தயாரிக்கும் ஆலையின் உரிமையாளர் முத்துசாமியின் மருமகன் முருகேசனின் வாழைத்தோட்டத்தில் இன்று மர்ம நபர்கள் புகுந்து 200க்கும் மேற்பட்ட வாழை மரங்களை வெட்டி சாய்த்துள்ளது இன்று மேலும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended