• முகப்பு
  • குற்றம்
  • ஜேடர்பாளையம் வடகரை ஆத்தூர் பகுதி பொதுமக்கள் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டி மனு.

ஜேடர்பாளையம் வடகரை ஆத்தூர் பகுதி பொதுமக்கள் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டி மனு.

முத்தையா

UPDATED: May 15, 2023, 8:20:53 PM

நாமக்கல் மே. 15  கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகில் கபிலர்மலை ஒன்றியம் வடகரை ஆத்தூர் ஊராட்சியில் ஆடு மேய்க்க சென்ற விவசாய பெண் நித்தியா மானபங்கப்படுத்தப்பட்டு இறந்து கிடந்தார்.

இது சம்பந்தமாக அந்த பெண்ணின் உறவினர்களும் ஊர் மக்களும் அவர் பிணம் வைக்கப்பட்டு இருந்த நாமக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அப்போது கரும்பு வெள்ளம் தயாரிக்கும் ஆலையில் வேலை செய்யும் வட மாநில தொழிலாளர்கள் தான் இந்த குற்றத்தை செய்ததாக அவர்கள் குற்றம் சாட்டி இருந்தார்கள் அது விசாரணையில் இருந்து வரும் நிலையில் அந்த வழக்கு நேற்று14 ஆம் தேதி தமிழக அரசு சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றி உத்தரவிட்டது.

இதனிடையில் இதற்கு முன்பு நேற்று 14.05.2023 அதிகாலை 1 மணி அளவில் வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்யும் கரும்பு சர்க்கரை வெள்ளம் தயாரிக்கும் ஆலை கொட்டகையில் வட மாநில தொழிலாளர்கள் தங்கி உள்ள இடத்தில் தூங்கி கொண்டு இருந்த போது மண்ணெண்ணெய் குண்டு வீசி அவர்களை கொல்ல முயற்சி செய்தார்கள் மர்ம நபர்கள் 

அது சம்பந்தமாக காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து விசாரித்து வந்த நிலையில் சம்பவம் நடந்த நேற்றே தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு அந்த வழக்கை மாற்றி உள்ளனர் 

இதனிடையில் அந்த ஜேடர்பாளையம் வடகரை ஆத்தூர் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங் ,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலை செல்வன் ஆகியோரிடம் நேரில் மனு  கொடுத்தனர்.

அந்த மனுயில் தங்கள் ஊராட்சி பகுதியில் தங்களால் வசிக்க முடியவில்லை அங்கு வசிக்கும் பொது மக்கள் அனைவருக்கும் கடந்த இரண்டு மாதங்களாக சமூக விரோத கும்பல் மறைமுகமாக அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்கிறார்கள்.

ஆகவே பொதுமக்கள் ஆகிய நாங்கள் அங்கே தினம் தினம் பயத்தாலும், அச்சத்தாலும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எங்களால் ரோட்டில் நடமாடவும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவும், இரவு நேரங்களில் விவசாய பணிகளுக்கும் தோட்டத்திற்கும், தண்ணீர் பாய்ச்சுவதற்கும், கால்நடைகளுக்கு தீவனம் சேகரிக்கவும், மற்றும் அன்றாட தேவைகளுக்கும் கூட வெளியில் செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம், 

வடகரை ஆத்தூர் ஊராட்சியில் உள்ள தோட்ட வேலைகளுக்கு கூட வேறு இடங்களில் இருந்து வேலையாட்கள் வருவதற்கும் அச்சப்டுக்கிறார்கள்  இனிவரும் காலங்களில் பொதுமக்கள் ஆகிய நாங்கள் மற்றும் வேலை செய்ய வரும் ஆட்கள் வந்து செல்லவும் மக்களும் தக்க பாதுகாப்பு கொடுக்கவும்,

சமூக விரோதிகள் கண்களுக்கு சரியாக தென்படாமல் மறைமுகமாக செயல்படும் கும்பலை தடுக்குமாறும் ஊர் மக்கள் ஆகிய நாங்கள் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்து உள்ளனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended