ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி தொடங்கியது.

மனோஜ் குமார்

UPDATED: May 22, 2023, 10:07:40 AM

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி தலைமையில் 1432-பசிலி வருவாய் தீர்வாயம் ஆண்டிற்கான முதல் நாள் நடைபெறும் ஜமாபந்தி நிகழ்ச்சியில்,

ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் எஸ். இராமச்சந்திரன் பொதுமக்களிடம் மொத்தம் 137 மனுக்கள் பெற்று 12 மனுக்கள் ஏற்கப்பட்டு 125 மனுக்கள் நிலுவையில் வைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் வழங்கி மனுக்கள் குறித்து விசாரணை செய்து விரைவில் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருமாறு கேட்டுக்கொண்டார். 

இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் வட்டாட்சியர் மஞ்சுளா முன்னிலை வைத்தார் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் பாலாஜி அனைவரையும் வரவேற்றார்.

கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் குமரவேலு உட்பட வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன் மண்டல துணை வட்டாட்சியர் சங்கீதா மற்றும் கண்ணம்மங்கலம் பிர்காவைச் சேர்ந்த வருவாய் ஆய்வாளர் ரமேஷ் பாபு உட்பட கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended