• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்திக்கு பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் அமருவதற்கு இருக்கை இல்லாமல் அவதி.

தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்திக்கு பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் அமருவதற்கு இருக்கை இல்லாமல் அவதி.

மாரிமுத்து

UPDATED: May 16, 2023, 10:34:04 AM

தூத்துக்குடி மாவட்டத்தில் வருடம் தோறும் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது அதன்படி இந்த ஆண்டுக்கான ஜமாபந்தி 16ஆம் தேதி துவங்கியது.

தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தியில் மனு அளிப்பதற்காக பல கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பல மணி நேரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருந்தனர்.

வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து நின்று கொண்டிருந்ததால் பார்ப்பதற்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

ஜமாபந்திக்கு வருகை தரும் மாற்றுத்திறனாளிகள் முதியோர்கள் அமருவதற்கு இருக்கைகள் வசதி தாலுகா அலுவலகத்தில் இருந்து ஏற்பாடு செய்து கொடுத்திருக்க வேண்டும் அவர்கள் வரிசையில் நின்று கொண்டிருப்பது மிகவும் பார்ப்பறை பரிதாபமாக உள்ள சூழ்நிலைதான் இருந்தது.

இந்த நிலையில் சார் ஆட்சியரிடம் அள்ளிக் குளத்தில் உள்ள அரசு பணத்தை தனி நபருக்கு பட்டா கொடுக்கப்பட்டு அந்த இடத்தில் வீடுகள் கட்டப்பட்டுள்ளது பலமுறை புகார் அளித்தும் அதனை மீட்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அரசு குலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது தீர்வை போடப்பட்டுள்ளது.

அல்லி குளம் கிராமத்தில் உள்ள அரசு குளத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அதற்கு துணை போன அரசு அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் சார் ஆட்சியரிடம் மனு அளித்தார்.

அதற்கு சார் ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அங்கு நின்று கொண்டிருந்த வட்டாட்சியர் மற்றும் அலுவலர்களிடம் இது தொடர்பாக விபரங்களை கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIDEOS

RELATED NEWS

Recommended