Author: முத்தையா

Category: மாவட்டச் செய்தி

மக்கல் மாவட்டம் எருமப்பட்டி, பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், சாலப்பாளையம் ஆகிய இடங்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு அனுமதி தர மறுக்கும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஜல்லிக்கட்டு இளைஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி, பொட்டி ரெட்டி பட்டி, ஆலங்காநத்தம், ரெட்டிபட்டி சாலப்பாளையம், உள்ளிட்ட கிராமங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்காமல் இருந்து வருவதை கண்டித்து இதற்கு கண்டனம் தெரிவித்து ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு விளையாட்டு வீரர்கள் ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்போர் உள்ளிட்டோர்

இன்று 8.5.2023  சாலப்பாளையம் ராஜா தலைமையில் நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாமக்கல் துறையூர் சாலையில் உள்ள அலங்கா நத்தம் பிரிவு ரோட்டில் கூடி கண்டன ஆர்ப்பாட்டத்தை ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.

சாலப்பாளையம் கிராமத்தில் புதிதாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு அனுமதி வழங்க முடியாது என நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா பி.சிங் அறிவித்திருக்கும் நிலையில் அந்த இடத்திற்கும்,

ஏற்கனவே ஜல்லிக்கட்டு போட்டி பல ஆண்டுகளாக பாரம்பரியமாக நடந்து வந்த பொட்டேட்டிப்பட்டி அலங்காநத்தம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சேர்த்து அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.

இவர்களை சமாதானப்படுத்தும் பேச்சுவார்த்தையில் நாமக்கல் மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் சுரேஸ் ஈடுபட்டார்.

இதில் காவல் துறையும், வருவாய் துறையும் தொடர்ந்து முயற்சி செய்து கோரிக்கை வைத்திருக்கின்ற இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு முறையான அனுமதி பெற்று தர ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததை அடித்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொண்டார்கள்.

இதுகுறித்து தலைமை வகித்த ராஜா கூறுகையில் அப்போது இந்த போராட்டத்தை அதிகாரிகளின் வாக்குறுதியின் அடிப்படையில் முடித்துக் கொண்டதாக தெரிவித்தார்.

Tags:

#namakkalnews , #namakkalnewsintamil , #jallikattuprotest #jallikattu #namakkalnewslive , #namakkalnewstoday , #namakkalnewstodaytamil , #namakkalnewtodayslive #namakkalnewspapertoday , #இன்றையசெய்திகள்நாகை , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigaltamilnadu , #indrayaseithigalnagapattinamtamilnadu , #todaynewstamilnadu , #TheGreatIndiaNews #Tginews , #news , #Tamilnewschannel , #TamilnewsFlash , #Tamilnewslivetv , #namakkaltodaynews , #namakkallatestnews , #namakkalnews , #Latesttamilnadunewstamil , #spiritual #devotional #Tamilnewsdaily , #Districtnews , #politicalnewstamil , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews #tamillatestnews , #todaysindianewstamil #politicalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday
Comments & Conversations - 0