• முகப்பு
  • tamilnadu
  • சாதி மதம் அற்றவர் என சான்று பெறுவது மிக எளிது.

சாதி மதம் அற்றவர் என சான்று பெறுவது மிக எளிது.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சாதி மதம் அற்றவர் என சாதிச்சான்றிதழ் பெறுவதற்கென அரசாங்கத்தில் தனி வழி முறைகள் எதுவும் கிடையாது . வழக்கமாக சாதிச்சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் வழி முறை எதுவோ அதே போல்தான் சாதிமதம் அற்றவர் என சான்றிதழ் பெற விண்ணப்பிக்கவேண்டும் சாதிமதம் அற்றவர் என சான்றிதழ் பெறுவது எப்படி ...? முதலில் அலுவலரிடம் ( V.A.O ) நாம் ஒரு பேப்பரில் வெள்ளை விடுநர் , பெறுநர் போட்டு அதில் உங்கள் விவரங்கள் குறிப்பிட்டு பின்பு சாதி மதம் அற்றவர் என சாதிச்சான்றிதழ் வேண்டி விண்ணப்பத்தை கிராம நிர்வாக அலுவலரிடம் அளிக்க வேண்டும் . நாம் கொடுத்த மனுவை கிராமநிர்வாக அலுவலர் அவர்கள் நாம் அளித்த மனுமீது விசாரனைசெய்து அறிக்கையை இனைத்துவருவாய் ஆய்வாளர் ஆர்.ஐ - க்கு ( R.I ) பரிந்துரை செய்து அனுப்பிவைப்பார் அதன்பின்பு வருவாய் ஆய்வாளர் ஆர்.ஐ- அவர்கள் நாம் கொடுத்த மனுவையும் கிராம நிர்வாக அலுவலர் அளித்த அறிக்கையையும் ஒப்பிட்டு அதனை சரிபார்த்து அந்தமனுவை வட்டாட்சியருக்குப் பரிந்துரை செய்வார் . வட்டாட்சியர் அதை சரிபார்த்து சான்றிதழ் வழங்க உத்தரவு இடுவார் . அவ்வளவு தான் . குறிப்பு : தாசில்தார் அவர்கள் உங்கள் மனுவை நிராகரித்தால் நீங்கள் மாவட்ட ஆட்சியர் இடத்தில் மனுஅளித்தும் நிவாரணம் கோரலாம். ஏற்கனவே அது போல சாதி இல்லா சாதி சான்று வாங்கியவர்களின் சான்றின் நகலை வைத்து இதே போல எனக்கும் வேண்டும் என்று கேட்கலாம். *அனுபவஸ்தன்*

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended