Author: மேஷாக்

Category: மாவட்டச் செய்தி

விழுப்புரம்: செஞ்சிக் கோட்டை சுற்றியுள்ள வனப்பகுதியில் மான்கள் அதிகளவில் இருக்கின்றன. அவைகளில் ஒரு மான் நீண்ட நாட்களாக செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சுற்றித் வந்தது.

சில நாட்களில் இரவு நேரத்தில் வனப்பகுதிக்கு சென்று அதிகாலையில் மீண்டும் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திற்கு வந்துவிடும்.

அவ்வாறு நேற்று இரவு வனப்பகுதிக்கு சென்ற மான் இன்று அதிகா லையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தது.

அலுவலக கேட் பூட்டப்பட்டிருந்ததால், அலுவலகம் அருகில் இருந்த குடியிருப்பு பகுதியில் மான் நுழைந்தது.

இதனை பார்ப்பதற்காக அப்பகுதி மக்கள் குவிந்தனர். தகவல் அறிந்த செஞ்சி வனத்துறை வனச்சரகர் வெங்கடேசன் தலைமையிலான வனவர்கள் மானை பக்குவமாக பிடித்து, ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் விட்டனர்.

குடியிருப்பு பகுதியில் வந்த மானை காண பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:

#இன்றையசெய்திகள்விழுப்புரம் , #deer #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigalVillupuramtamilnadu , #indrayaseithigalVillupuram , #todaynewsvillupuramtamilnadu , ##TheGreatIndiaNews , #Tginews , #news , #Tamilnewschannel , #TamilnewsFlash , #Tamilnewslivetv , #villupuramtodaynews , #villupuramlatestnews , #villupuramnews , #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnewstamil , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews , #tamillatestnews , #todaysindianews , #tamilpoliticalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #peoplestruggle #indiabusinesstoday
Comments & Conversations - 0