• முகப்பு
  • அரசியல்
  • தமிழகத்தின் நிரந்தர முதல்வர் மு க ஸ்டாலின் என்பதை மறுக்கிறேன் வருங்கால பிரதமர் என்பதே சரி.

தமிழகத்தின் நிரந்தர முதல்வர் மு க ஸ்டாலின் என்பதை மறுக்கிறேன் வருங்கால பிரதமர் என்பதே சரி.

செ.சீனிவாசன்

UPDATED: May 10, 2023, 6:00:50 AM

நாகை மாவட்டம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளை அருகே கொளப்பாடு ஊராட்சியில் கீழையூர் மேற்கு ஒன்றிய திமுக ஒன்றிய செயலாளர் சோ.பா. மலர்வண்ணன் தலைமையில் திமுக இரண்டு ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது தலைமை கழக பேச்சாளர் எழும்பூர் கோபி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 

தமிழக அரசின் இரண்டு ஆண்டு சாதனைகளான மகளிர்க்கு இலவச பஸ், உயர் கல்வி படிக்க பெண்களுக்கு மாதம் ரூபாய் 1000, பால் விலை மூன்று ரூபாய் குறைப்பு, துவக்கப்பள்ளி மாணவ மாணவியருக்கு காலை சிற்றுண்டி, பெண்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு,

டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் எதிர்காலம் கருதி ஒவ்வொரு ஊராட்சிகளிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையம், குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு சம உரிமை மற்றும் பல திட்டங்களை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் செய்துள்ளார் தொடர்ந்து பல நலத்திட்டங்களை மக்களுக்காக அறிவித்து வருகிறார். 

தமிழகத்தின் நிரந்தர முதல்வர் மு க ஸ்டாலின் என்பதை மறுக்கிறேன் வருங்கால பிரதமர் என்பதை சரி நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வோம் என தெரிவித்தார்.

கூட்டத்தில் கொளப்பாடு ஊராட்சி மன்ற தலைவரும் மாவட்ட பிரதிநிதி அசோக்குமார் பொதுக்குழு உறுப்பினர் கோசி குமார் ஒன்றிய பெருந்தலைவர் தமிழரசி ஒன்றிய அவைத்தலைவர் சண்முகசுந்தரம் ஒன்றிய துணை செயலாளர் சுரேஷ் பார்த்திபன் மாவட்ட பிரதிநிதி குமார் நிர்மல்ராஜ் ஒன்றிய பொருளாளர் வடுகநாதன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிய கழக நிர்வாகிகள் கிளை கழக நிர்வாகிகள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

  • 1

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended