Author: THE GREAT INDIA NEWS

Category: pondichery

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா கலந்து கொண்டு சர்வதேச பொது சுகாதார பள்ளியை நாட்டுக்கு அர்ப்பணித்த நிகழ்ச்சி நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி தொடங்கியவுடன் தன்வந்திரி மருத்துவ ஸ்லோகம் இசைக்கப்பட்டது. அடுத்து விழா தொடங்கியது மத்திய அமைச்சர் துணைநிலை ஆளுநர் முதல்வர் ஆய்வு பேசி முடித்த பிறகு நன்றி கூறுவதற்காக இருந்தது, அப்போது திடீரென்று குறுக்கிட்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை தமிழ் தாய் வாழ்த்து கட்டாயம் இசைக்க வேண்டும் என்று கூறினார். இதனை அடுத்து நன்றி உரை வாசிப்பதற்கு முன்பே தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது, பின்னர் நன்றியுரை கூறி முடிந்தவுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டது ,ஜிப்மர் விழாவில் இதுவரை இல்லாத அளவில் முதன்முதலாக துணைநிலை ஆளுநர் தமிழிசை நடவடிக்கையால் தமிழ் தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து விழாவில் இருந்து வெளியே வந்த துணைநிலை ஆளுநர் தமிழிசையை செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு இது பற்றி கேட்கும்போது.... ஜிப்மர் மருத்துவமனையில் வேண்டுமென்றே இதுபோன்ற செய்வது கிடையாது அறியாமையால் நடந்தது என்று தெரிவித்தார். மேலும் மத்திய அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்ள வேண்டும் ஏனென்றால் ஜிப்மர் மருத்துவமனையில் மருந்துகள் தட்டுப்பாடு மற்றும் மருத்துவர்கள் குறைகளை உடனடியாக சரி செய்து கொடுக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார். அதே வேளையில் தமிழகமாக இருந்தாலும் சரி, புதுச்சேரியாக இருந்தாலும் சரி தேசிய கீதமும் தமிழ்த்தாய் வாழ்த்தும் இல்லாமல் எந்த ஒரு நிறுவனமும் இருக்காது இது எனது ஆளுமைக்கு உட்பட்டு சொல்கிறேன் என்று கூறிய தமிழிசை இதை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார் பேட்டி; தமிழிசை சௌந்தரராஜன், துணைநிலை ஆளுநர் புதுச்சேரி பாண்டிச்சேரி செய்தியாளர் சக்திவேல்.

Tags:

#tamiliasai #tamiliasaisoundararajan #tamiliasaigovernor #cmrangasamy #இன்றையசெய்திகள்புதுச்சேரி #இன்றையமுக்கியசெய்திகள்புதுச்சேரி #இன்றையசெய்திகள்புதுச்சேரி #TheGreatIndiaNews #Tginews #news #pondicherynews #pondicherynewstoday #pondicherynewstamil #pondicherynewstodaytamil #pondicherynewspaperonline #pondicherycm #puducherry #puducherrynews #puducherrynewstoday #puducherrynewstamil #jipmerhospital #jipmerpondicherry #jipmer
Comments & Conversations - 0