• முகப்பு
  • education
  • கல்வியை மாநில பட்டியலுக்கு மீண்டும் கொண்டு வர வேண்டியது அவசியம் - சகாயம் ஐஏஎஸ்

கல்வியை மாநில பட்டியலுக்கு மீண்டும் கொண்டு வர வேண்டியது அவசியம் - சகாயம் ஐஏஎஸ்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரி ஆண்டு விழா நிறுவன தலைவர் திருநாவுக்கரசு தலைமயில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் கோ ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனரும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அலுவலருமான சகாயம், சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார் அப்போது . எனது நேர்மையை ஒரு காலும் யாராலும் மாற்ற முடியாது, ஏன் என்றால் நான் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவன் என்றும், தமிழகத்தில் ஊழலை ஒழிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை கொண்டவன், இத்தகைய தன்னம்பிக்கை மாணவர்களாகிய உங்களுக்கு நிரம்ப இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார் நிகழ்ச்சிக்கிடையே செய்தியாளர்களை சந்தித்த சகாயம், கோ ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனராக இருந்த 2014 கால கட்டத்தில், ஜனவரி 06ம் தேதியை வேட்டி தினமாக அறிவித்து மாநிலம் முழுவதும் தமிழர்களின் கலாச்சார உடையான வேட்டி அணிய வலியுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு, கல்லூரி மாணவர்களிடம் இதனை கொண்டு சேர்க்க பல்கலைக்கழகத்திற்கு கடிதம் எழுதியதன் வாயிலாக, அன்றைக்கு 20க்கும் மேற்பட்ட ஆட்சியர்கள், பாரம்பரிய உடையான வேட்டி அணிந்தனர். அதுபோலவே 70க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவியர்களும் நம் பாரம்பரிய உடை அணிந்து வந்து பெருமைபடுத்தினர் அதன்பிறகு இதனை கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் கைவிட்டது, ஆனால் தனியார் நிறுவனங்கள் இதனை லாவகமாக கையில் எடுத்துக் கொண்டு பெரும் வணிகம் பார்க்கின்றனர். தெரிவித்த அவர், ஏழை எளிய நெசவாளர்களின் வாழ்வு உயர தமிழக அரசு, வாரத்திற்கு ஒருநாளாவது, அரசு ஊழியர்களை நம்முடைய கலாச்சார உடையான வேட்டியில் அணிந்து வர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அதுபோலவே நெருக்கடி காலத்தில் 1970ல் கல்வி மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு கொண்டு போகப்பட்டது, பன்முக தன்மை கொண்ட இந்தியாவில், பல மொழி, கலாச்சாரம், பண்பாடு, கொண்டதால், இது மாநில பட்டியலில்; இருக்க வேண்டியது அவசியம் . தற்போதை தமிழக அரசு, சுயாட்சியில் உறுதியோடு இருந்து இதனை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வர அனைத்து விதமான முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்றும் சகாயம் கேட்டுக் கொண்டார். கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.

VIDEOS

RELATED NEWS

Recommended