ஆட்டோ கட்டணம் உயரப்போகிறதா?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தமிழகத்தில் ஆட்டோகட்டணத்தை மறுநிர்ணயம் செய்யும் வகையில் புதியகட்டண உயர்வு அரசுக்குபரிந்துரை செய்யப் பட்டுள்ளது. தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்குமுன் வாடகை ஆட்டோக்களுக்கான குறைந்தபட்சகட்டணத்தை 25 ரூபாயாக அரசு நிர்ணயித்தது. அத்துடன் கூடுதலாகபயணிக்கும் ஒவ்வொரு கி.மீ.க்கும் 12 ரூபாய்கட்டணம் என்று இருந்தது. மேலும் காத்திருப்புகட்டணம் ஐந்துநிமிடத்துக்கு 3.50 ரூபாயாகவும் இரவு 11:00 மணிமுதல் அதிகாலை 5:00 மணிவரை 50 சதவீத கூடுதல்கட்டணம் வசூலிக்கவும் அனுமதிவழங்கப்பட்டது. அதன் பின் விலை வாசி உயர்ந்ததால் அரசின் பரிந்துரையை ஆட்டோஓட்டுனர்கள் மதிக்கவில்லை. அதேநேரத்தில் 'ஓலா, உபர்' உள்ளிட்ட தனியார் செயலி வழிநிறுவனங்கள் ஆட்டோக்களை இயக்கின. தற்போது 80 சதவீதத்துக்கும் அதிகமான ஆட்டோக்கள் செயலிநிறுவனங்களுடன் இணைந்துள்ளன. இதைபயன்படுத்தி செயலிநிறுவனங்கள் ஓட்டுனர்களிடம் அதிக கமிஷன்வசூலிக்க துவங்கி உள்ளன. அதே போல் பயணியரிடமும் ரத்துகட்டணம் விடுமுறை கட்டணம்புறநகர் கட்டணம் என வெவ்வேறு வகையில் பணம்பார்த்து வருகின்றன. இந்நிலையில் தமிழகஅரசே ஆட்டோக்களுக்கான செயலியை வடிவமைத்து 'டிஜிட்டல்மீட்டர்'களை வழங்கிகட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். தனியார்செயலிகளை விட குறைந்தகமிஷன் பெற்று அதன் ஒருபகுதியை நலவாரியத்தின் வாயிலாக ஓட்டுனர்களுக்குவழங்க வேண்டும் என ஆட்டோசங்கத்தினர் போக்குவரத்து கமிஷனரிடம் கோரிக்கைவைத்தனர். இதற்கிடையில் மறுசீரமைத்தகட்டணத்தை மக்களுக்கு தெரிவிக்கும் படி உயர்நீதி மன்றமும் உத்தரவிட்டது. இதை அடுத்து ஆட்டோ கட்டணத்தை மறு வரையரை செய்யகுழு அமைக்கப்பட்டது. அந்தக்குழு ஆட்டோ தொழிற்சங்கத்தினர் மற்றும் நுகர்வோர்சங்கங்களுடன் ஆலோசனை நடத்தி உயர்த்தப்பட்டகட்டண பட்டியலை அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. அதன்படி 1.5 கி.மீட்டருக்குள்ளான துாரத்துக்கு கட்டணமாக 40 ரூபாய்; கூடுதலான ஒவ்வொரு கி.மீ.க்கும் 18 ரூபாயாகவும்உயர்த்தலாம் என பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது. செய்தியாளர் க. துர்கா மதன்குமார்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended